செய்யறிவு என்பது, ஏதோ ஓரிடத்தில் இருந்துகொண்டு நமக்காக வேலை செய்யும், நம் வேலையை எளிதாக்கும் என்று மனிதர்கள் நினைத்திருந்த நிலையில், நம் வேலையையே அழித்தொழித்துவிடும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
கடந்த ஒரு சில ஆண்டுகளாக எண்ணற்ற நிபுணத்துவம் பெற்ற பணி வாய்ப்புகளை ஏஐ, தன்னைக் கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கிறது. உண்மையில் பலரும் செய்யறிவு என்பது மென்பொருள் துறையை மட்டும் பாதிக்கும் என்றுதான் இன்று வரை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், நம் செல்போனில் கூகுள் எனப்படும் தேடுபொறியில் தேடும் விதத்தையே செய்யறிவு மாற்றியமைத்திருக்கிறது, இது பலருக்கும் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.
தற்போது, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு நடத்திய ஆய்வில் செய்யறிவால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளின் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
பயனர்கள் – மைக்ரோசாஃப்ட் பிங் கோபைலட் இடையே அடையாளம் தெரியாத மற்றும் தனியுரிமை அகற்றப்பட்ட உரையாடல்கள் என சுமார் 2 லட்சம் உரையாடல்களைப் பகுப்பாய்வு செய்து, இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
எந்தெந்த துறைகளில், உற்பத்தி ரீதியாக ஏஐ சாட்பாட்களைப் பயன்படுத்துகின்றன என்று கண்டறியப்பட்டது. பிறகு, ஒரு பணியை செய்யறிவு எந்த வகையில் செய்து முடிக்கிறது, ஒரு வேலை எவ்வாறு நடந்து முடிகிறது என்பதை செய்யறிவு எவ்வாறு மாற்றுகிறது, சில வேலைகளின் தன்மையை செய்யறவு ஆள்களின் உதவியோடு செய்து முடிக்கிறது. சில வேலைகளை ஆள்களின் உதவியில்லாமல் சிறப்பாக செய்து முடிக்கிறது என்று ஆய்வு செய்யப்பட்டது. எழுதுதல், தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றை ஆய்வு செய்த போது, இந்தப் பணிகளை ஒரு நபரின் துணை இல்லாமலேயே செய்யறிவு முழுமையாக செய்து முடிக்கும் என்பதை காட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் பட்டியலிட்ட பணிகளில் சில..
மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயரப்பாளர்கள்
வரலாற்றாசிரியர்கள்
பயணிகளுக்கு வழிகாட்டுவோர்
சேவை விற்பனை பிரதிநிதிகள்
எழுத்தாளர்கள் மற்றும் கட்டுரையாளர்கள்
வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள்
சிஎன்சி புரோகிராமர்கள்
டெலிஃபோன் ஆபரேட்டர்
டிக்கெட் ஏஜென்ட்டுகள்
தொலைக்காட்சி தொகுப்பாளர், வானொலி தொகுப்பாளர்
தரகர்கள்
பண்ணை மற்றும் வீட்டு மேலாண்மை கல்வியாளர்
தொலைபேசி விற்பனை பிரதிநிதி
வரவேற்பாளர்கள்
அரசியல் அறிவியலாளர்கள்
செய்தி நெறியாளர், செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள்
கணித மேதைகள்
தொழில்முறை எழுத்தர்கள்
எழுத்துப் பிழை திருத்துவோர் மற்றும் கட்டுரையை நகல் எடுப்பவர்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவோர்
தொகுப்பாளர்கள்
வணிக ஆசிரியர்கள்
பொதுத் தொடர்பு நிபுணர்கள்
பொருள் விளம்பரதாரர்கள்
விளம்பர விற்பனை பிரதிநிதி
கணக்காளர்கள்
புள்ளியியல் துறை உதவியாளர்கள்
தரவு அறிவியல்
தனிநபர் நிதி ஆலோசகர்கள்
தகவல் தொகுப்பாளர்கள்
பொருளாதார ஆசிரியர்கள், பேராசிரியர்கள்
வெப் டெவலப்பர்ஸ்
மேலாண்மை நிபுணர்கள்
புவியியல் துறையினர்
மாடல்கள்
சந்தை ஆராய்ச்சி நிபுணர்கள்
பொதுப் பாதுகாப்பு தொலைத்தொடர்புத் துறை
சுவிட்ச்போர்டு ஆபரேட்டர்
நூலக அறிவியல் ஆசிரியர்கள், பேராசிரியர்கள்
டையர் ரிப்பேர், மாற்றுவோர்
கப்பல் பொறியாளர்கள்
உதவி செவிலியர்கள்
தீயணைப்புத் துறை மேற்பார்வையாளர்கள்
தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்குவர்
கண் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள்
மசாஜ் செய்பவர்கள்
அறுவைசிகிச்சை உதவியாளர்கள்
பேக்கேஜிங் பிரிவு
நெடுஞ்சாலை பராமரிப்புத் தொழிலாளர்கள்
சுமை தூக்கும் தொழிலாளர்கள்
உள்ளிட்ட ஏராளமான பணிகள், செய்யறிவினால் நிரப்பப்படும் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது இந்தப் பணிகளை எல்லாம் செய்யறிவு செய்து முடித்துவிடும் என்பது அர்த்தமல்ல, ஆனால், இந்த செய்யறிவு இப்பணிகளை கையாண்டு, செய்து முடிக்க உதவும் என்பதும் அர்த்தமாகிறது.
தற்போது, செய்யறிவால் செய்ய இல்லாத அல்லது குறைந்த அளவே செய்யக் கூடிய பணிகளையும் எதிர்காலத்தில் முழுமையாக செய்து முடிக்கும் அபாயமும் உள்ளது.
A study conducted by Microsoft’s research division has revealed a list of sectors most affected by cybercrime.
இதையும் படிக்க.. ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி