• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

செயலற்ற நிலையில் இருக்கும் EPF அக்கவுன்ட்டை அன்-பிளாக் செய்வது எப்படி…? வழிமுறைகள் இதோ…!

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
செயலற்ற நிலையில் இருக்கும் EPF அக்கவுன்ட்டை அன்-பிளாக் செய்வது எப்படி…? வழிமுறைகள் இதோ…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 14, 2025 5:12 PM IST

உங்களுடைய EPF அக்கவுண்ட் செயலற்றதாக மாறிவிட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

News18News18
News18

எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) என்பது இந்தியாவில் மிகவும் முக்கியமான ஓய்வு கால சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் டியர்னஸ் அலவன்ஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் EPF அக்கவுண்டில் குறிப்பிட்ட அளவு பணத்தை ஊழியர் செலுத்துவார். அதே அளவு தொகையை ஒவ்வொரு மாதமும் அவர் பணிபுரியும் நிறுவனமும் பங்களிக்கும்.

EPF என்பது தனியார் துறையில் உள்ள மாத வருமானம் பெறும் நபர்களுக்கு ஏற்ற மிகவும் பிரபலமான ஒரு ஓய்வுக் கால சேமிப்புத் திட்டமாக அமைகிறது. அரசு EPF-க்கான வட்டி விகிதத்தை அவ்வப்போது நிர்ணயிக்கிறது. எனினும் 36 மாதங்களுக்கு தொடர்ச்சியாக எந்தவொரு பங்களிப்பும் செய்யப்படாத EPF அக்கவுண்டுகள் செயலற்றதாக மாறிவிடும். ஒருவேளை உங்களுடைய EPF அக்கவுண்ட் செயலற்றதாக மாறிவிட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

செயலற்ற நிலையில் உள்ள EPF அக்கவுண்ட்டை அன்பிளாக் செய்வது எப்படி?

ஒருவேளை செயலற்ற நிலையில் இருக்கும் EPF அக்கவுண்ட்டிற்கு யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் UAN இல்லாவிட்டால் அதனை உடனடியாக உருவாக்க வேண்டும். செயலற்ற நிலையில் உள்ள அக்கவுண்ட்டிற்கு ஒரு புதிய UAN-ஐ உருவாக்குவதற்கு அல்லது ஏற்கனவே உள்ள UAN உடன் PF அக்கவுண்ட்டை இணைப்பதற்கு நீங்கள் EPFO அலுவலகத்தை அணுக வேண்டும்.

ஒருவேளை உங்களால் அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல முடியாவிட்டால் UAN உருவாக்குவதற்கு ஆன்லைனில் ஒரு கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். அதன்பிறகு EPFO அலுவலகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் உங்களுடைய பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் UAN உருவாக்குவதற்கு உங்களுடைய வீட்டிற்கு வருவார்.

செயலற்ற நிலையில் உள்ள EPF அக்கவுண்ட்டை அன்பிளாக் செய்ய பின்வரும் படிகளை பின்பற்றுங்கள்:

  • முதலில் EPFOஇன் யூனிஃபைட் மெம்பர் போர்ட்டலுக்கு சென்று உங்களுடைய UAN மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி உள்நுழையவும்.
  • அதில் டாஷ்போர்டில் காணப்படும் ‘Help Desk’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  • பிறகு ‘Inoperative account assistance’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
  • தேவையான விவரங்களை நிரப்பி, ஸ்கிரீனில் காணப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி EPF அக்கவுண்ட்டை அன்லாக் செய்வதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
இதையும் படிங்க: கிரெடிட் கார்டை பயன்படுத்தி UPI பேமெண்ட்… இது நல்லா இருக்கே…!

மேலே உள்ள படிகளை நிறைவு செய்த பிறகு 20 முதல் 25 நாட்களுக்குள் உங்களுடைய EPF அக்கவுண்ட் அன்பிளாக் செய்யப்படும். ஒருவேளை கோரிக்கையை சமர்ப்பிக்கும் செயல்முறையில் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால், உடனடியாக நீங்கள் EPFiGMS போர்ட்டலில் ஒரு புகாரை தாக்கல் செய்யலாம். அதே சமயத்தில், உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை கண்காணிப்பதற்கு EPFO போர்ட்டலை பார்வையிடுங்கள்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 14, 2025 5:12 PM IST

Read More

Previous Post

IND vs ENG : சூப்பர் த்ரில்லராக அமைந்த 3ஆவது டெஸ்ட்.. போராடி தோற்றது இந்திய அணி

Next Post

உயிருடன் இருக்கும் தாய்க்கு சவப்பெட்டி வாங்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற மகன்; என்ன காரணம் தெரியுமா? | china: Son takes his living mother in coffin; why?

Next Post
உயிருடன் இருக்கும் தாய்க்கு சவப்பெட்டி வாங்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற மகன்; என்ன காரணம் தெரியுமா? | china: Son takes his living mother in coffin; why?

உயிருடன் இருக்கும் தாய்க்கு சவப்பெட்டி வாங்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற மகன்; என்ன காரணம் தெரியுமா? | china: Son takes his living mother in coffin; why?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin