• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

செயற்கை நுண்ணறிவு மூலம் போலிக் காணொளிகள்: தற்காலிகத் தடை குறித்து ஆராயப்படுகிறது

GenevaTimes by GenevaTimes
July 9, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
செயற்கை நுண்ணறிவு மூலம் போலிக் காணொளிகள்: தற்காலிகத் தடை குறித்து ஆராயப்படுகிறது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூர்:

மின்னிலக்கம் மூலம் தயாராகும் போலிக் காணொளிகளைக் கண்காணிப்பதுடன் அவற்றுக்கு தற்காலிகமாகத் தடை விதிப்பது ஆகியவை பற்றி சிங்கப்பூர் ஆராய்ந்து வருகிறது.

சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால், உண்மைக்கும் பொய்க்கும் இடையேயான வரைகோடு தெளிவின்றி இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

உலக நாடுகள் போலிக் காணொளிகளை எதிர்கொள்ளும் முறைகளை ஆராய்ந்து வருகின்றன என்று சைனாடவுனில் உள்ள ‘பார்க்ராயல் கலெக்‌ஷன் பிக்கரிங்’ என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 9ஆம் தேதி) தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.

மாநாட்டு மேடையில் ராய்ட்டர்ஸ் கிழக்கு ஆசியா, பசிபிக் செய்தி ஆசிரியர் சோயங் கிம்முடன் நடைபெற்ற நேர்காணலில் பேசிய திருவாட்டி டியோ, தென்கொரியாவில் ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் அந்நாட்டு அரசாங்கம் போலிக் காணொளிகளுக்கு 90 நாள் தடை விதித்ததைச் சுட்டினார்.

அங்கு திருத்தி அமைக்கப்பட்ட சட்டங்கள் ஜனவரி 29ஆம் தேதி அமலுக்கு வந்தன. அவற்றை மீறினால் ஒருவருக்கு ஏழு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது 50 மில்லியன் வோன் (S$49,0000) வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

எனினும், சிங்கப்பூரின் தேர்தல் காலம் மிகக் குறுகியது என்பதை டியோ நினைவூட்டினார்.

“சிங்கப்பூரில் தேர்தல் நடக்கும் நாள் 90 நாள்களுக்கு முன் தெரிய வாய்ப்பில்லை. அதனால், தென்கொரிய சட்டம் நம் நாட்டுக்குப் பொருந்தாது. எனவே, நமக்கு ஏற்புடைய ஒன்றை நாம் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று தமது உரையில் கூறினார்.

தற்போதைய நிலையில் சிங்கப்பூர் தேர்தலுக்கு தேதி குறிப்பிடப்படவில்லை. அது 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் நடைபெற வேண்டும் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

சிங்கப்பூர் அரசியல்வாதிகளும் போலிக் காணொளிகளுக்கு ஆட்பட்டுள்ளனர். இதில் அண்மைய சம்பவமாக செயற்கை நுண்ணறிவு மூலம் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அனைத்துலக விவகாரங்கள் குறித்து கருத்துரைக்கும் காணொளிகள் வலம் வந்தன.

The post செயற்கை நுண்ணறிவு மூலம் போலிக் காணொளிகள்: தற்காலிகத் தடை குறித்து ஆராயப்படுகிறது appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் ‘விஷன் 2030’ ஜனாதிபதிக்கு கையளிப்பு

Next Post

நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு – ரயில் சேவைகள் ரத்து

Next Post
நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு – ரயில் சேவைகள் ரத்து

நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு - ரயில் சேவைகள் ரத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin