[ad_1]
Last Updated:
இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து ட்ரீம் 11 விலகியதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக ட்ரீம் 11 செயல்பட்டு வந்தது. சுமார் 358 கோடி ரூபாய் மதிப்பில் ட்ரீம் 11 ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ட்ரீம் லெவன் பிசிசிஐ உடனான தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்தது. இதை அடுத்து புதிய ஸ்பான்சர்ஷிப்பை தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது.
இதற்கு விருப்பமுள்ள நிறுவனங்கள் செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே சூழலில் இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இம்மாதம் 9-ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் 28ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்நிலையில், ட்ரீம் 11 ஒப்பந்தத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி 80 சதவீத முறை அதிரடியாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. சில முன்னணி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ தளத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி 5,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 80 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு 1,199 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
September 04, 2025 6:26 PM IST