Last Updated:
செம்மர கடத்தல் வழக்கில் 10 தமிழ்நாடு கூலித் தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6 லட்சம் அபராதம் விதித்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
செம்மர கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பதி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செம்மர கடத்தல் வழக்கில் 2019ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், சேட்டு, ரமேஷ், சம்பத் உள்ளிட்ட 10 பேரை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை திருப்பதியில் உள்ள செம்மர கடத்தல் தடுப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் குற்றவாளிகள் என செம்மர கடத்தல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, 10 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Tirupati,Chittoor,Andhra Pradesh
July 31, 2025 8:52 PM IST
செம்மரக்கடத்தல் வழக்கில் தமிழர்கள் 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை… திருப்பதி நீதிமன்றம் உத்தரவு