• Login
Saturday, April 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சென்னை வாசிகளை கவரும் தம் டீ… அண்ணா சாலையை வசப்படுத்தும் குட்டி ஈரான்…

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
சென்னை வாசிகளை கவரும் தம் டீ… அண்ணா சாலையை வசப்படுத்தும் குட்டி ஈரான்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 27, 2025 2:16 PM IST

ஒரு தேயிலை தோட்டத்துல ஒரு தொழிலாளி பறிக்குற டீ இன்னொரு தொழிலாளிக்காக தானே போயி சேருது. நூற்றாண்டுகள் எத்தனை மாறினாலும் நவீனமாக தொழிற்சாலைகள் வந்தாலும் ‘டீ’ பட்டாளிகளின் தோழன்.

X

ஈரானி

ஈரானி டீ ஸ்டால்

அண்ணா சாலை’ போக்குவரத்து நெரிசலான பகுதி. ஒரு நத்தை போல சிக்னலுக்காக காத்திருக்கும் எல்லோரும் போல நானும் ஒரு சராசரி. நினைத்துக்கொண்டிருந்த காலங்கள் மாறி. கொஞ்சம் இடது, வலதுமாக திரும்பிப் பார்க்கும்போது ‘உலக அரசியலை’ தன் இயல்பில் சொல்லக்கூடியதாக தெரிந்தது. ஒரு பக்கம் ‘அமெரிக்க தூதரகத்தின்’ முன்னால் குவிந்திருக்கும் கூட்டம். இன்னொரு பிரிட்டிஷ் கற்பனையில் உருவான ‘ஸ்பென்சர்’. இந்த இரண்டையும் சேர்க்கிற மாதிரி ‘ஈரானி டீ ஸ்டால்’.

உலகில் எந்த மூலையில் போர் வந்தாலும், போர் பதற்றம் தமிழ்நாட்டுக்குள் இருக்கும். இஸ்ரேல் – பாலஸ்தீனப் போல போராட்டம், பேரணி பாலஸ்தீனத்துக்காக செய்யும் கூட்டம் இங்கு தான் இருக்கு. ஈரானுக்காக துடிக்கும் மனமும் தமிழர்களுடையது. ஆங்கில படங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலகட்டத்திலும், ஈரானிய படங்களை தலையின் மீது தூக்கி வைத்து கொண்டாடும் பழக்கம் இங்கு இருக்கு. திரைப்படம், அரசியல் மூலமாக ஈரானுக்கும் தமிழர்களுக்கான நெருக்கம் இன்னும் அதிகம்.

சென்னையின் வெயிலை தாங்கிக்கொண்டு அண்ணா சாலையில் நடந்துபோகும் தான் ஒரு டீக்கடை. அதில் நின்று டீ குடித்த யாரும் வெயில் என்பதை பொருட்படுத்தாமல் டீ குடித்துக்கொண்டிருந்தார்கள்… வெயிலை மறக்க வைக்கும் கடையை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும் தானே… ‘ஈரானி’ டீ ஸ்டால், ஈரான் பாரம்பரியத்தை ஒட்டி, சென்னையை நம்பி வந்த ஈரான் குடும்பத்தால் உருவான கடை. இவ்வளவு கூட்டத்துக்கு காரணம் தம் டீ தான்… வெந்நீரை நன்கு கொதிக்க வைத்து பின்னர் தேயிலையைச் சேர்த்து வாசம் வரும் வரை பதப்படுத்துவது தான் ‘தம்’ முறை.

இதையும் வாசிக்க:Koomapatti: இன்ஸ்டா மூலம் ட்ரெண்டிங் ஆன கூமாபட்டி ஸ்பாட்… ஆட்சியராக இருந்த ஜெயசீலனின் X தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு…

சாதாரண டீக்களை விட தயாரிப்பு நேரம் அதிகம் என்றாலும், சுவையும் நறுமணமும் தான் தம் டீ குடிக்க முக்கிய காரணம் என்கிறார்கள். அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் வரிசையில் நிற்கும் ஒருவருக்கு ஈரானி டீயினால் கிடைக்கும் ‘Refreshment’ தேவைப்படுகிறது. இந்தியா மட்டுமல்ல உலகத்துக்கே புரியாத GEO POLITICS தமிழ்நாட்டினுடையது. வர்க்கரீதியாக பார்த்தாலும்கூட எங்கேயோ ஒரு தேயிலை தோட்டத்தில் ஒரு தொழிலாளி பறிக்கும் டீ இன்னொரு தொழிலாளிக்காக தானே போய்ச் சேருகிறது. நூற்றாண்டுகள் எத்தனை மாறினாலும் நவீன தொழிற்சாலைகள் வந்தாலும் ‘டீ’ பாட்டாளிகளின் தோழன்.

“நம்மூர் டீயெல்லாம் பெரிதாக வாசனை வராது. அதுவும் ஸ்ட்ராங்காக டீ குடிப்பதென்பது நம்மூர் ஸ்டைல் டீயில் வராது. இது நன்றாக கொதிக்க வைத்து ‘தம்’ போட்டு அப்புறம் டீ போடுகிறார்கள். அது குடிக்கும்போது நல்ல வாசமும், குடிக்கும்போதே தொண்டையிலேயே அந்த டீயின் ஸ்ட்ராங்கும் தெரியும். பொதுவாக டீ எதுக்கு குடிக்கிறோம்? ‘Refresh’க்காக தான். அதை இந்த கடை டீ நினைவுபடுத்துகிறது. அதற்காக தொடர்ந்து வருகிறோம்.” அப்படின்னு டீயின் மீதுகொண்ட காதலை மீண்டும் உறுதிப்படுத்தியது. பாட்டாளி வர்க்கம்

‘நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்’ — விஸ்வரூபத்தின் கமல் எழுதிய வரிகளின் ரீங்காரத்திற்கு மத்தியில் டீயை முழுதாக குடிக்க முடியவில்லை, என்னால் பன் பட்டர் ஜாம் முழுதாக சாப்பிட முடியவில்லை. இந்த மாதிரி பல உலக நாடுகளை தொடர்புபடுத்தும் மாதிரி அந்த நாடுகளின் கலாச்சார விழுமியங்கள் இந்தியா முழுவதிலும் இருக்கிறது. அண்ணா சாலையில் இது கொஞ்சம் அதிகம். ஆஹா.. ஈரானி டீ என்ன டேஸ்ட்டாக இருக்கிறது என்று தோன்றவில்லை.. பதுங்குழியில் வெளி வந்தார்களா? சாப்பாடு கிடைத்ததா? இந்த டீ அவங்களுக்கு கிடைத்திருக்குமா? மண்டையை துளைக்கும் கேள்விக்குள் MIND REFRESHMENT என்பது காணாமல் போய்விட்டது.

இதையும் வாசிக்க: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஒரு வழியாக பதற்றம் முடிந்து ‘Ceasefire’ அறிவித்துவிட்டார்கள். எல்லா கோகோன்மைக்கு பிறகும் இரண்டு டீயில் முடியும் பரியேறும் படத்தின் இறுதி காட்சி போல இரண்டு டீ என் கண் முன்னால் தெரிந்தது. இந்த டீக்கடை ஒரு உரையாடலை எதிர்பார்க்கிறது. ஸ்பென்சர் வரும் பொதுமக்கள் ஆகட்டும், தூதரகத்துக்கு முன்னால் நிற்பவர்களுக்கும். ஒரு சாதாரண டீக்கடை அங்கு வந்து டீ குடிப்பவர்கள் இவையெல்லாம் யோசிப்பார்களா? அவர்களுக்கு இவையெல்லாம் தெரியுமா? டீ நன்றாக இருக்கிறது டீ குடிக்க வருகிறார்கள் அவ்வளவு தானே என்று தோன்றுகிறது, இல்லையா?

அதே இதே மனநிலை தானே போரினால் பாதிக்கப்படும் நாட்டு மக்களுடைய மனநிலையாக இருந்திருக்கும். இந்த  போர் ஏன்? எதற்காக? எதுவுமே தெரியாது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நியூஸ்18 தமிழின் லைஃப்ஸ்டைல் ​​கேட்டகிரியானது, உடல்நலம், உணவு, டிராவல், ஃபேஷன், சமையல் குறிப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.
First Published :

June 27, 2025 2:15 PM IST

Read More

Previous Post

கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்! | apple farming in kodaikanal explained

Next Post

இரு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் கணவர் பலி; மனைவி, இரு பிள்ளைகளுக்குக் காயம் | Makkal Osai

Next Post
இரு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் கணவர் பலி; மனைவி, இரு பிள்ளைகளுக்குக் காயம் | Makkal Osai

இரு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் கணவர் பலி; மனைவி, இரு பிள்ளைகளுக்குக் காயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin