சென்னை: ‘இந்து தமிழ் திசை நாளிதழ் நடத் தும் ‘சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ- 2025 இரண்டு நாள் வீட்டு வசதி கண்காட்சி, சென்னை நந் தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.காலை 10 முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், ஐ ஆட்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் நிறு வனமும் இணைந்து, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அபி எஸ்டேட் நிறு வனத்தின் ஆதரவுடன் சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ -2025 என்ற இரண்டு நாள் வீட்டுவசதி கண்காட்சியை சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நடத் துகின்றன. இந்த கண்காட்சியை பாரத ஸ்டேட் வங்கியின் துணை பொதுமேலாளர் ரோஹித் சஹா நேற்று தொடங்கிவைத்தார்.
வங்கியின் உதவி பொதுமேலாளர் கள் சேஷாசலம்.ராதாகிருஷ்ணன். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளர் அன்புமணி. அபி எஸ்டேட் நிறு வனத்தின் மக்கள் தொடர்பு அதி காரி என்.முரளிதரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். தொடக்க விழாவில், இந்து தமிழ் திசை நாளிதழின் விளம்பர விற்பனை பிரிவு பொது மேலாளர் வி.சிவக் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாரத ஸ்டேட் வங்கி. அபி எஸ் டேட். தமிழ்நாடு வீட்டுவசதி வாரி யம், கனராவங்கி, இந்தியன் வங்கி, யூனியன் வங்கி, பரோடா வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி.ஐடிபிஐ கி. ரெப்கோ ஹோம் ஃபை வங்கி. னான்ஸ். எல்ஐசி ஹவுசிங் ஃபை னான்ஸ் உள்பட 50 நிறுவனங்கள் கண்காட்சியில் அரங்குகள் அமைத்துள்ளன. வீட்டுமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் சொகுசு வில்லாக் களுக்கு இங்கு முன்பதிவு செய் யலாம். நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி இன்று நிறைவடை கிறது. பொதுமக்க மக்கள் காலை 10 முதல் இரவு 7.30 மணிவரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
வீட்டு வசதி கண்காட்சியில் பங்கேற்ற பாரத ஸ்டேட் வங் கியின் துணை பொதுமேலா ளர் (ரியல் எஸ்டேட் வீட்டுவசதி வர்த்தக பிரிவு) ரோஹித் சஹா. உதவி பொது மேலாளர்கள் சேஷாசலம் (ரியல் எஸ்டேட்). ராதாகிருஷ்ணன் (பில்டர்ஸ்) ஆகியோர் கூறியதாவது: இந்த கண்காட்சியில் எங்கள் ஸ்டாலுக்கு வருகை தந்து முன்ப திவு செய்யும் தகுதியான வாடிக் கையாளர்களுக்கு உடனடி கடன் ஒப்புதல் வழங்கப்படும். அவர் களுக்கு பரிசீலனை கட்டணத் தில் சலுகை அளிக்கப்படும். ஒருசில கடன் திட்டங்களுக்கு எவ்வித பரிசீலனை கட்டணமும் வசூலிக்கப்படாது. இந்த கண் காட்சி மூலமாக ரூ.300 முதல் ரூ.400 கோடிக்கு கடன் ஒப்புதல் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
வீட்டுவசதி கடனுக்கான இஎம்ஐ செலுத்தும் வாடிக்கை யாளர்கள் கூடுதல் தொகையை செலுத்தினால் அது அசலில் வரவு வைக்கப்படும். இதனால், அவர்கள் முன்கூட்டியே கடனை அடைத்துவிடலாம். கடனுக்கான இஎம்ஐ செலுத்த தொடங்கி ஓராண்டுக்கு பிறகு குறைந்த வட்டியில் டாப்-அப் லோன் பெறலாம் என்றனர்.
அபிஎஸ்டேட் விற்பனைப்பிரிவு தலைவர் ஆர்.செந்தில் முருகன் கூறியதாவது:எங்கள் நிறுவனத் தில். தையூர், படப்பை, மண்ணி வாக்கம் ஆகிய இடங்களில் உள்ள மனைத்திட்டங்களுக்கு முன்பதிவு நடந்துவருகிறது. இந்த கண்காட்சி யில் முன்பதிவு செய்யும் வாடிக் கையாளர்களுக்கு சதுர அடிக்கான கட்டணத்தில் ரூ.125 குறைத்து வழங்கப்படும். மேலும், எங்கள் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு. முன்பதிவு செய்து 25 நாட்களுக்குள் பத்திரப் பதிவை முடிக்கும் வாடிக்கையா ளர்களுக்கு சிறப்பு விருந்தும். ஒரு அதிர்ஷ்டசாலிக்கு ராயல் என்ஃபீல்ட் பைக் பரிசாக வழங் கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கூறும்போது. “தற்போது சென்னையில் வில்லிவாக்கம், எம்.கே.பி நகர்,சோழிங்க நல்லூர். ஜாபர்கான் பேட்டை, ஷெனாய் நகர் ஆகிய இடங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்கு மாடிகுடியிருப்பு வீடுகளுக்கு முன் பதிவு நடைபெறுகிறது. அசோக் நகர், அரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான முன் பதிவு விரைவில் தொடங்கும். பொதுத்துறை. தனியார் வங்கிகளில் பொது மக்கள் எளிதில் கடன் பெறமுடியும். பத்திரப்பதிவு செய்யும் போது முத்திரைத் தாள் கட்டணத்திலும் சலுகை கிடைக்கும்” என்றனர்.