Last Updated:
ஐஐடி காரக்பூரில் உலோகவியல் துறையில் இன்ஜினியரிங் படிப்பை சுந்தர் பிச்சை முடித்தார்.
Google நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். தனது அபார திறமை மற்றும் கடின உழைப்பால் இன்றைய உலகின் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் சுந்தர் பிச்சை இருந்து வருகிறார்.
இன்றைக்கு தொழில்நுட்ப துறையில் சாதிக்க விரும்பும் ஏராளமான இளைஞர்களுக்கு சுந்தர் பிச்சை இன்ஸ்பிரேஷன் ஆக மாறி இருக்கிறார். இந்நிலையில் அவரது வளர்ச்சி குறித்து அறிந்து கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அவரது படிப்பு, இளம் வயது வாழ்க்கை உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் கவனம் பெறுகின்றன.
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சை மதுரையை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை பெயர் ரகுநாத பிச்சை. இவர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார்.
அவரது தாயார் லட்சுமி ஒரு ஸ்டெனோகிராபர். சுந்தர் பிச்சைக்கு தம்பி ஒருவர் உள்ளார். அவரது பெயர் ஸ்ரீனிவாசன் பிச்சை. சென்னையில் ஜவஹர் வித்யாலயா பள்ளியில் படித்த சுந்தர் பிச்சை ஐஐடி மெட்ராஸில் உள்ள வனவாணி பள்ளியில் பள்ளி மேற்படிப்பை முடித்தார்.
ஐஐடி காரக்பூரில் உலோகவியல் துறையில் இன்ஜினியரிங் படிப்பை சுந்தர் பிச்சை முடித்தார். அதன் பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற அவர் அங்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் பொறியியல் பிரிவில் மாஸ்டர் பட்டம் பெற்றார்.
June 30, 2025 12:19 PM IST
சென்னை பள்ளி முதல் அமெரிக்க பல்கலை. வரை.. கூகுள் CEO சுந்தர் பிச்சையின் பட்டப் படிப்புகள் இவைதான்..