• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சென்னை கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் விரைவில் ‘எலைட்’ பிரிவு | ‘Elite’ section soon at Cooptex Thillaiyadi Valliammai Silk Shop

GenevaTimes by GenevaTimes
June 11, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சென்னை கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் விரைவில் ‘எலைட்’ பிரிவு | ‘Elite’ section soon at Cooptex Thillaiyadi Valliammai Silk Shop
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னை எழும்பூர் கோ-ஆப் டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் எலைட் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக கோ-ஆப் டெக்ஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அரசின் கைத்தறி, துணிநுால் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும், கோ-ஆப்டெக்ஸ், 89 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது. இது, இந்திய அளவில், முன்னணி கைத்தறி நிறுவனமாக செயல்படுகிறது. தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து, நாடு முழுவதும் உள்ள 150 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் தலைமையகம் சென்னை எழும்பூரில் இருக்கிறது. இங்கு கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டுமாளிகை செயல்படுகிறது. இங்கு எலைட் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இப்பிரிவை கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் ஆர்.ஆனந்தகுமார் மற்றும் விற்பனை பிரிவு அதிகாரிகள் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் கூறியது: “கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் எலைட் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இங்கு உயர்தரமான பட்டு ரகங்கள் இடம்பெற உள்ளன. குறிப்பாக, வெவ்வேறு வகையான பட்டுப்புடவை, பருத்தி சேலை உள்பட 50 ரகங்களில் புடவைகள், சேலைகள் வைக்கப்பட உள்ளன. தனியார் கடைகளுக்கு நிகராக பிரத்யேக பட்டுபுடவைகள் இங்கு கிடைக்கும்.

இதைத் தவிர, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, ஒசூர் ஆகிய நகரங்களிலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் எலைட் பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தற்போது 450 ரகங்களில் 25 லட்சம் முதல் 30 லட்சம் பொருட்கள் உள்ளன. இவைகள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் தவிர ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. கோ – ஆப்டெக்ஸ் மூலமாக 2023-24-ம் ஆண்டில் ரூ.215 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்றனர்.



Read More

Previous Post

“இந்தியாவுடன் விளையாடுவது உணர்வுபூர்வமானது” – அமெரிக்காவின் சவுரப் நேத்ராவால்கர் | T20 WC | Playing with India is truly emotional USA Cricketer Saurabh Netravalkar

Next Post

மலாவி ராணுவ விமான விபத்து: துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழப்பு | Malawi Vice President Saulos Chilima and 9 others killed in plane crash

Next Post
மலாவி ராணுவ விமான விபத்து: துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழப்பு | Malawi Vice President Saulos Chilima and 9 others killed in plane crash

மலாவி ராணுவ விமான விபத்து: துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழப்பு | Malawi Vice President Saulos Chilima and 9 others killed in plane crash

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin