• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: 6-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி தோல்வி | Chennai Grand Masters Chess Tournament Arjun Erikaisi Defeats in Round 6

GenevaTimes by GenevaTimes
November 11, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: 6-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி தோல்வி | Chennai Grand Masters Chess Tournament Arjun Erikaisi Defeats in Round 6
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 6-வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி அதிர்ச்சி தோல்வி கண்டார்.

இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற 6-வது சுற்று போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில் ஈரானின் அமீன் தபதாபேயி, சகநாட்டைச் சேர்ந்த பர்ஹாம் மக்சூட்லூவுடன் மோதினார். இந்த ஆட்டம் 36-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

2-வது போர்டில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அரவிந்த்சிதம்பரம், அர்ஜுன் எரிகைசி பலப்பரீட்சை நடத்தினர். இதில் அரவிந்த் சிதம்பரத்திடம், உலகத்தர வரிசையில் இரண்டாவது இடம் வகிக்கும்அர்ஜுன் எரிகைசி 48-வது நகர்த்தலின்போது அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ், செர்பியாவின் அலெக்ஸி சாரானாவுடனான ஆட்டம் 31-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 4-வது ஆட்டத்தில் இந்தியாவின் விதித் குஜ்ராத்தி, அமெரிக்காவின் லெவோன் அரோனியனுடன் மோதினார். இந்த ஆட்டம் 64-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

7 சுற்றுகள் கொண்ட இந்தத்தொடரில் 6 சுற்றுகளின் முடிவில்அர்ஜுன் எரிகைசி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். லெவோன் அரோனியன் 4 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அரவிந்த் சிதம்பரம் 3.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அமீப் தபதாபேயி 3.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ் 2.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், பர்ஹாம் மக்சூட்லூ 2.5 புள்ளிகளுடன் 6-வதுஇடத்திலும், விதித் குஜ்ராத்தி 2புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், அலெக்ஸி சாரானா 2 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.

சாலஞ்சர்ஸ் பிரிவில் லியோன் மென்டோன்கா சிறப்பாக விளையாடி கார்த்திகேயன் முரளியை வென்றார். 2-வது போர்டில் அபிமன்யு புராணிக்கை சிறப்பாக விளையாடி வைஷாலியை வீழ்த்தினார். ரனவுக்சத்வானி, ஹரிகா துரோணவல்லியுடனான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. பிரணவ், பிரனேஷ் ஆகியோர் மோதிய ஆட்டம்35-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

சாலஞ்சர் பிரிவில் லியோன் மென்டோன்கா 4.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரவுனக் சத்வானி 3.5புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அபிமன்யு புராணிக் 3 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பிரனேஷ் 3 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், கார்த்திகேயன் முரளி 2.5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், ஹரிகா துரோணவல்லி 1.5 புள்ளியுடன் 7-வது இடத்திலும், ஆர்.வைஷாலி 1 புள்ளியுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.



Read More

Previous Post

ஜார்க்கண்ட்டில் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரர்களை கண்டறிய பாஜக குழு அமைக்கும்: அமித் ஷா | If voted to power in J’Khand, BJP to set up committee to identify infiltrators: Amit Shah

Next Post

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?….

Next Post
அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?….

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin