• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: ரூ.25 லட்சம் பரிசுடன் பட்டம் வென்றார் வின்சென்ட் கீமர் | Chennai Grand Masters 2025: Vincent Keymer wins title

GenevaTimes by GenevaTimes
August 16, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: ரூ.25 லட்சம் பரிசுடன் பட்டம் வென்றார் வின்சென்ட் கீமர் | Chennai Grand Masters 2025: Vincent Keymer wins title
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நடை​பெற்று வந்​தது. போட்​டி​யின் 9-வது நாளான நேற்று 9-வது மற்​றும் கடைசி சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. 8-வது சுற்​றின் முடி​விலேயே 6 புள்​ளி​களு​டன் சாம்​பியன் பட்​டம் வெல்​வதை உறுதி செய்​திருந்​தார் ஜெர்​மனி கிராண்ட் மாஸ்​ட​ரான வின்​சென்ட் கீமர். அவர், தனது கடைசி சுற்​றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான ரே ராப்​சனுடன் மோதி​னார்.

இதில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய வின்​சென்ட் கீமர் 41-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். இதன் மூலம் அவர், இந்​தத் தொடரில் ஒரு தோல்​வியை கூட சந்​திக்​காமல் 7 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து சாம்​பியன் பட்​டத்தை வென்​றார். மேலும் லைவ்ரேட்​டிங்​கில் 2750.9 புள்​ளி​களு​டன் 10-வது

இடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டார்.

இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான அர்​ஜுன் எரி​கைசி, கார்த்​தி​கேயன் முரளி ஆகியோர் மோதிய ஆட்​டம் 49-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. இதே​போன்று அமெரிக்​கா​வின் அவாண்​டர் லியாங், இந்​தி​யா​வின் விதித் குஜ​ராத்தி மோதிய ஆட்​டம் 31-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. நெதர்​லாந்​தின் அனிஷ் கிரி, சகநாட்​டைச் சேர்ந்த ஜோர்​டன் வான் பாரஸ்டை 33-வது நகர்த்​தலின் போது தோற்​கடித்​தார். இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான நிஹால்சரின், சகநாட்​டைச் சேர்ந்த வி.பிரணவை 55-வது நகர்த்​தலின் போது வீழ்த்​தி​னார்.

கடைசி சுற்​றின் முடி​வில் வின்​சென்ட் கீமர் 7 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றார். நெதர்​லாந்​தின் அனிஷ் கிரி 5 புள்​ளி​களு​டன் 2-வது இடமும், அர்​ஜுன் எரி​கைசி 5 புள்​ளி​களு​டன் 3-வது இடமும் பிடித்​தனர். கார்த்​தி​கேயன் முரளி (5), நிஹால் சரின் (4.5), அவாண்​டர் லியாங் (4.5), விதித் குஜ​ராத்தி (4), ஜோர்​டன் வான் பாரஸ்ட் (4), வி.பிரணவ் (3), ரே ராப்​சன் (3) ஆகியோர் முறையே 4 முதல் 10 இடங்​களு​டன் தொடரை நிறைவு செய்​தனர்.

குவாண்ட்​பாக்ஸ் சென்னை கிராண்ட்​மாஸ்​டர்ஸ் 2025 தொடரில் மாஸ்​டர்ஸ் பிரி​வில் சாம்​பியன் பட்​டம் வென்ற வின்​சென்ட் கீமருக்கு ரூ.25 லட்​சம் பரிசுத் தொகை வழங்​கப்​பட்​டது. அத்​துடன் 24 ஃபிடே சர்க்​யூட் புள்​ளி​களும் அவருக்கு கிடைத்​தது. இந்த புள்​ளி​கள் வரும் 2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள கேண்​டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறு​வதற்கு முக்​கிய​மான​தாகும். அனிஷ் கிரி, அர்ஜுன் எரிகைசி, கார்த்திகேயன் முரளி ஆகியோர் ஒரே புள்ளிகளை (6 புள்ளிகள்) பெற்றிருந்ததால் அவர்களுக்கு தலா ரூ.10.83 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

முழு​மை​யாக இந்​திய வீரர்​கள் கலந்து கொண்​டுள்ள சேலஞ்​சர்ஸ் பிரி​வில் 9-வது மற்​றும் கடைசி சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான எம்​.பிரனேஷ், சர்​வ​தேச மாஸ்​ட​ரான ஜி.பி.ஹர்​ஷ்வர்​தனுடன் மோதி​னார். 6.5 புள்​ளி​களு​டன் களமிறங்​கிய பிரனேஷ் 47-வது நகர்த்​தலின் போது அதிர்ச்சி தோல்வி அடைந்​தார். இதனால் அபிமன்யு புராணிக், லியோன் லூக் மெடன்​டோன்கா ஆகியோ​ருக்கு பட்​டம் வெல்​வதற்​கான வாய்ப்பு கிடைத்​தது. ஆனால் அதை அவர்​கள், பயன்​படுத்​திக் கொள்​ளத் தவறினர்.

6 புள்​ளி​களு​டன் இருந்த லியோன் லூக் மென்​டோன்கா தனது கடைசி சுற்​றில் அதிபன் பாஸ்​கரனுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இதில் அதிபன் பாஸ்​கரன் வெள்ளை காய்​களு​ட​னும், லியோன் லூக் மென்​டோன்கா கருப்பு காய்​களு​ட​னும் விளை​யாடி​னார்​கள். இந்த ஆட்​டத்​தில் அதிபன் பாஸ்​கரன் 44-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். இதனால் லியோன் லூக் மென்​டோன்கா பட்​டம் வெல்​லும் வாய்ப்பை இழந்​தார்.

அதேவேளை​யில் 6 புள்​ளி​களு​டன் தனது கடைசி சுற்றை சந்​தித்த அபிமன்யு புராணிக், பா.இனியனுடன் மோதி​னார். இதில் இனியன் வெள்ளை காய்​களு​ட​னும், அபிமன்யு புராணிக் கருப்பு காய்​களு​ட​னும் களமிறங்​கினர். இந்த ஆட்​டத்​தில் 97-வது நகர்த்​தலின் போது இனியன் வெற்றி பெற்​றார்.

அபிமன்யு புராணிக், லியோன் லூக் மென்​டோன்கா தங்​களது கடைசி சுற்​றில் தோல்வி அடைந்​த​தால் எம்​.பிரனேஷ் 6.5 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து சேலஞ்​சர்ஸ் பிரி​வில் சாம்​பியன் பட்​டம் வென்​றார். அவருக்கு ரூ.7 லட்​சம் பரிசுத் தொகை வழங்​கப்​பட்​டது. சேலஞ்​சர்ஸ் பிரி​வில் பட்​டம் வென்​றதன் மூலம் வரும் 2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள சென்னை கிராண்ட் மாஸ்​டர் தொடரில் மாஸ்​டர்ஸ் பிரி​வில் நேரடி​யாக கலந்து கொள்​வதற்கு தகுதி பெற்​றுள்​ளார் எம்​.பிரனேஷ்.

கடைசி சுற்​றின் முடி​வில் எம்​.பிரனேஷ் 6.5 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றார். அனை​வரை​யும் வியப்​பில் ஆழ்த்​திய அதிபன் பாஸ்​கரன் 6 புள்​ளி​களு​டன் 2-வது இடம்பிடித்து தொடரை நிறைவு செய்​தார். அபிமன்யு புராணிக் 6 புள்​ளி​களு​டன் 3-வது இடமும், லியோன் லூக் மென்​டோன்கா 6 புள்​ளி​களு​டன் 4-வது இடமும் பிடித்​தனர்.

பா.இனியன் (5.5), திப்​தாயன் கோஷ் (4.5), ஜி.பி.ஹர்​ஷ்வர்​தன் (4), ஆர்​யன் சோப்ரா (4), ஹரிகா துரோணவல்லி (1.5), ஆர்​.வைஷாலி (1) ஆகியோர் முறையே 5 முதல் 10-வது இடங்​களு​டன்​ தொடரை நிறைவு செய்​தனர்​. அதிபன் பாஸ்கரன், அபிமன்யு புராணிக், லியோன் லூக் மென்டோன்கா ஆகியோர் ஒரே புள்ளிகளை (6 புள்ளிகள்) பெற்றிருந்ததால் இவர்களுக்கு தலா ரூ.3.25 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.



Read More

Previous Post

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? ஒமா் அப்துல்லா சீற்றம்

Next Post

விளையாட்டு தகராறுகளில் அதிகாரப் போட்டிகள் வேண்டாம்: உயர் நீதிமன்றம்

Next Post
விளையாட்டு தகராறுகளில் அதிகாரப் போட்டிகள் வேண்டாம்: உயர் நீதிமன்றம்

விளையாட்டு தகராறுகளில் அதிகாரப் போட்டிகள் வேண்டாம்: உயர் நீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin