• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: சாம்பியன் பட்டத்தை நெருங்குகிறார் வின்சென்ட் கீமர் | Chennai Grand Masters Chess Vincent Keymer closes championship title points

GenevaTimes by GenevaTimes
August 14, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: சாம்பியன் பட்டத்தை நெருங்குகிறார் வின்சென்ட் கீமர் | Chennai Grand Masters Chess Vincent Keymer closes championship title points
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 7-வது நாளான நேற்று 7-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தியை சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான கார்த்திகேயன் முரளி 71-வது நகர்த்தலின் போது வீழ்த்தினார்.

உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதிய ஆட்டம் 35-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.

புள்​ளி​கள் பட்​டியலில் முதலிடம் வகிக்​கும் ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமர், அமெரிக்​கா​வின் அவாண்​டர் லியாங்​குடன் மோதி​னார். கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய வின்​சென்ட் கீமர் 39-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். முதல் 3 சுற்​றுகளில் வெற்​றிகளை குவித்​திருந்த வின்​சென்ட் கீமர் அடுத்த 3 சுற்​றுகளை​யும் டிரா செய்​திருந்​தார். தற்​போது 7-வது சுற்​றில் அவர், மீண்​டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்​ளார். இன்னும் 2 சுற்றுகளே உள்ள நிலையில் 5.5 புள்ளிகளுடன் வின்சென்ட் கீமர் சாம்பியன் பட்டம் கைப்பற்றுவதை நெருங்கி உள்ளார்.

நெதர்​லாந்​தின் ஜோர்​டன் வான் பாரஸ்ட், இந்​தி​யா​வின் வி.பிரணவ் மோதிய ஆட்​டம் 98-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. மற்​றொரு ஆட்​டத்​தில் அமெரிக்​கா​வின் ரே ராப்​சனை இந்​தி​யா​வின் நிஹால் சரின் 43-வது நகர்த்​தலின் போது தோற்​கடித்​தார்.

முழு​மை​யாக இந்​திய வீரர்​கள் கலந்து கொண்​டுள்ள சேலஞ்​சர்ஸ் பிரிவு 7-வது சுற்​றில் கிராண்ட் மாஸ்​ட​ரான ஹரிகா துரோணவல்லி 75-வது நகர்த்​தலின் போது சர்​வ​தேச மாஸ்​ட​ரான ஜி.பி.ஹர்​ஷ்வர்​தனிடம் தோல்வி அடைந்​தார். மற்​றொரு ஆட்​டத்​தில் ஆர்​.வைஷாலியை 76-வது நகர்த்​தலின் போது தோற்​கடித்​தார் எம்​.பிரனேஷ்.

ஆர்​யன் சோப்​ரா, அபிமன்யு புராணிக் மோதிய ஆட்​டம் 37-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. திப்​தாயன் கோஷ், லியோன் லூக்மென்​டோன்கா​வுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இதில் லியோன் லூக் மென்​டோன்கா 52-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். பா.இனியன், அதிபன் பாஸ்​கரனுடன் மோதிய ஆட்​டம் 36-வது நகர்த்​தலின் போது டிரா​ ஆனது.

7 சுற்​றுகளின் முடி​வில் மாஸ்​டர்ஸ் பிரி​வில் வின்​சென்ட் கீமர் 5.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார். அர்​ஜுன் எரி​கைசி (4), முரளி கார்த்​தி​கேயன் (4), அனிஷ் கிரி (3.5), அவோண்​டர் லியாங் (3.5), ஜோர்​டான் வான் பாரஸ்ட் (3.5), விதித் குஜராத்தி (3), நிஹால் சரின் (3), வி.பிரணவ் (2.5), ரே ராப்​சன் (2.5) ஆகியோர் முறையே 2 முதல் 10-வது இடங்​களில் உள்​ளனர்.

சேலஞ்​சர்ஸ் பிரி​வில் எம்​.பிரனேஷ், லியோன் லூக் மென்​டோன்கா ஆகியோர் தலா 5.5 புள்​ளி​களு​டன் முதல் இரு இடங்​களில் உள்​ளனர். அபிமன்யு புராணிக் (5), அதிபன் பாஸ்​கரன் (4), பா.இனியன் (4), திப்​தாயன் கோஷ் (3.5), ஜி.பி.ஹர்​ஷ்வர்​தன் (3), ஆர்​யன் சோப்ரா (2), ஹரிகா துரோணவல்​லி (1.5), ஆர்​.வைஷாலி (1) ஆகியோர்​ முறையே 3 முதல்​ 10-வது இடங்​களில்​ உள்​ளனர்​.



Read More

Previous Post

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை…! கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள்… | இந்தியா

Next Post

கோவையில் 20,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் – ஜிஎஸ்டி ‘நடவடிக்கை’க்கு தொழில் துறையினர் எதிர்ப்பு | Notices to 20000 Companies on Coimbatore: Industry Opposes GST “Measure”

Next Post
கோவையில் 20,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் – ஜிஎஸ்டி ‘நடவடிக்கை’க்கு தொழில் துறையினர் எதிர்ப்பு | Notices to 20000 Companies on Coimbatore: Industry Opposes GST “Measure”

கோவையில் 20,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் - ஜிஎஸ்டி ‘நடவடிக்கை’க்கு தொழில் துறையினர் எதிர்ப்பு | Notices to 20000 Companies on Coimbatore: Industry Opposes GST "Measure"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin