• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வெற்றியுடன் தொடங்கினார் எரிகைசி | Chennai Grand Masters 2025: Arjun Erigaisi, Vincent Keymer exciting start

GenevaTimes by GenevaTimes
August 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வெற்றியுடன் தொடங்கினார் எரிகைசி | Chennai Grand Masters 2025: Arjun Erigaisi, Vincent Keymer exciting start
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: கு​வாண்ட்​பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று தொடங்​கியது.

இந்​தியா மற்​றும் உலகம் முழு​வ​தி​லுமிருந்து 19 சிறந்த கிராண்ட்​மாஸ்​டர்​கள் மற்​றும் ஒரு சர்​வ​தேச மாஸ்​டர் பங்​கேற்​றுள்ள இந்​தப் போட்​டி​யின் மொத்த பரிசுத்​தொகை ரூ.1 கோடி ஆகும். மேலும் இந்​தத் தொடர் மதிப்​புமிக்க ஃபிடே சர்க்​யூட் புள்​ளி​களை​யும் வழங்​கு​கிறது. இந்த புள்​ளி​கள் 2026 கேண்​டிடேட்ஸ் போட்​டிக்கு தகுதி பெறு​வதை தீர்​மானிப்​ப​தில் முக்​கிய பங்கு வகிக்​கிறது.

எம்​ஜிடி1 நிறு​வனத்​தால் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ள சென்னைகிராண்ட் மாஸ்​டர்ஸ் போட்​டி, மாஸ்​டர்ஸ் மற்​றும் சேலஞ்​சர்ஸ் என இரண்டு பிரிவு​களில் நடை​பெறுகிறது. இரு பிரி​விலும் தலா 10 வீரர்​கள் கலந்து கொண்டுள்ள இந்த தொடர் ரவுண்ட்​-​ராபின் முறை​யில் நடத்​தப்​படு​கிறது.

போட்​டி​யின் தொடக்க நாளான நேற்று மாஸ்​டர்ஸ் பிரிவு முதல்சுற்​றில் சென்​னையைச் சேர்ந்த கிராண்ட்​மாஸ்​டர்​களான வி.பிரணவ், கார்த்​தி​கேயன் முரளி ஆகியோர் மோதினர். இந்த ஆட்​டம் 44-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. இதனால் இரு​வருக்​கும் தலா 0.5 புள்​ளி​கள் வழங்​கப்​பட்​டது.

இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​ஜுன் எரி​கைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான அவோண்​டர் லியாங்​குடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இதில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய உலகின் 5-ம் நிலை வீரரான அர்​ஜுன் எரி​கைசி 49-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்று முழு​மை​யாக ஒரு புள்​ளியை பெற்​றார்.

நெதர்​லாந்​தின் அனிஷ் கிரி, அமெரிக்​கா​வின் ரே ராப்​சன் மோதிய ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. வெள்ளை காய்​களு​டன் அனிஷ் கிரி விளை​யாடிய நிலை​யில் 59-வது நகர்த்​தலின் போது ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. இதனால் இரு​வருக்​கும் தலா 0.5 புள்​ளி​கள் வழங்​கப்​பட்​டது. மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான நிஹால் சரின், ஜெர்​மனி கிராண்ட் மாஸ்​ட​ரான வின்​சென்ட் கீமருடன் மோதி​னார். இதில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய நிஹால் சரின் 52-வது நகர்த்​தலின் போது தோல்வி அடைந்​தார்.

இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான விதித் குஜ​ராத்​தி, நெதர்​லாந்​தின் ஜோர்​டன் வான் பாரஸ்ட் மோதிய ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. விதித் குஜ​ராத்தி வெள்ளை காய்​களு​ட​னும், ஜோர்​டன் வான் பாரஸ்ட் கருப்பு காய்​களு​ட​னும் களமிறங்​கி​னார்​கள். 48-வது நகர்த்​தலின் போது இந்த ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. சேலஞ்​சர்ஸ் பிரிவு முதல் சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான எம்​.பிரனேஷ், ஆர்​யன் சோப்ரா ஆகியோர் மோதினர். இதில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய எம்​.பிரனேஷ் 26-வது நகர்த்​தலின் போதுவெற்றி பெற்​றார். இதனால் எம்​.பிரனேஷ் முழு​மை​யாக ஒரு புள்​ளியை பெற்​றார்.

அபிமன்யு புராணிக், அதிபன் பாஸ்​கரன் மோதிய ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. அபிமன்யு புராணிக் வெள்ளை காய்​களு​ட​னும், அதிபன் பாஸ்​கரன் கருப்பு காய்​களு​ட​னும் களமிறங்​கினர். இந்த ஆட்​டம் 46-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. இதனால் இரு​வருக்​கும் தலா 0.5 புள்​ளி​கள் வழங்​கப்​பட்​டது. மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான லியோன் லூக் மென்​டோன்​கா, சர்​வ​தேச மாஸ்​ட​ரான ஜி.பி. ஹர்​ஷவர்​தனுடன் மோதி​னார். இதில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய லியோன் லூக் மென்​டோன்கா 47-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். இதனால் அவர், முழு​மை​யாக ஒரு புள்​ளியை பெற்​றார்.

இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான ஆர்​.வைஷாலி – பா.இனியன் மோதிய ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. இதில் வைஷாலி வெள்ளை காய்​களு​டன் மோதி​னார். இந்த ஆட்​டம் 57-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. இதனால் இரு​வருக்​கும் தலா 0.5 புள்​ளி​கள் வழங்​கப்​பட்​டது. முன்​னணி வீராங்​க​னை​யான இந்​தி​யா​வின் துரோணவல்லி ஹரிகா தனது முதல் சுற்​றில் தோல்வி அடைந்​தார்​. திப்​தாயன் கோஷுக்​கு எதி​ராக வெள்​ளை காய்​களு​டன்​ விளை​யாடிய ஹரி​கா 44-வது நகர்த்​தலின்​ போது தோல்​வி அடைந்​தார்​.



Read More

Previous Post

மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Rahul Gandhi alleges election commission colluding with BJP to steal votes in Maharashtra elections

Next Post

மாதந்தோறும் ரூ.10,000க்கும் அதிகமான ரிட்டன்.. போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

Next Post
மாதந்தோறும் ரூ.10,000க்கும் அதிகமான ரிட்டன்.. போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

மாதந்தோறும் ரூ.10,000க்கும் அதிகமான ரிட்டன்.. போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin