Last Updated:
காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் பிரெவிஸை சிஎஸ்கே 2025 ஐபிஎல் சீசனில் ஒப்பந்தம் செய்துள்ளது. 81 டி20 போட்டிகளில் 1787 ரன்கள் எடுத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் வந்திருக்கும் புதிய இளம் வீரர் 2025 ஐபிஎல் சீசனில் பெரும் கவனம் பெற்றுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே. அணி ஏழு போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டில் மட்டுமே வெற்றியை கண்டுள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக சி.எஸ்.கே.வின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங், ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டெவால்ட் பிரெவிஸ் எனும் குட்டி ஏபிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
”காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸை டாடா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் மீதமுள்ள போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஒப்பந்தம் செய்துள்ளது. டெவால்ட் பிரெவிஸ் 81 டி20 போட்டிகளில் விளையாடி, 1787 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 162 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 2023 இல் தென்னாப்பிரிக்காவுக்காக களமிறங்கி தனது முதல் டி20 போட்டியில் விளையாடினார். இதுவரை இவர் இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது அவர் 2.2 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கேவுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்” என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : சச்சின் முன் சேவாக்கை முகத்தில் குத்திய பயிற்சியாளர் – நடந்தது என்ன தெரியுமா?
2022ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை போட்டியில் விளையாடி 506 ரன்களை குவித்துள்ளார். டி20 ஆண்கள் போட்டியில் சதம் விளாசிய முதல் தென் ஆப்பிரிக்க இளம் வீரர் எனும் சிறப்பை பெற்றவர் பிரெவிஸ். 162 ரன்கள் அடித்த போட்டியில் அவர் வெறும் 52 பந்துகளில் 150 ரன்களை எடுத்து டி20 போட்டியில் சாதனை படைத்தவர்.
பிரெவிஸ் முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார், அங்கு அவர் 10 போட்டிகளில் விளையாடினார். என்பது குறிப்பிடத்தக்கது.
April 18, 2025 8:32 PM IST


