• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சென்னை அணியில் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா? அவரே சொன்ன பதில் இதுதான்

GenevaTimes by GenevaTimes
April 30, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
சென்னை அணியில் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா? அவரே சொன்ன பதில் இதுதான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 30, 2025 10:47 PM IST

டைமிங்கில் தோனி அளித்த இந்த பதில் வர்ணனையாளருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

எம்.எஸ்.தோனிஎம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனி

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக கேப்டன் தோனி விளையாடுவாரா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தோனி டைமிங்கில் கொடுத்த பதில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

சென்னை அணிக்காக வீரர்களை திறமையாக வழிநடத்தி மகேந்திர சிங் தோனி 5 முறை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 43 வயதாகும் தோனி ஐபிஎல் தொடரில் விளையாடும் அதிக வயதுடைய வீரர் என்ற சாதனையையும் ஏற்படுத்தியிருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.

இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் சென்னை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்து தரவரிசை பட்டியலில் கடைசி இடமான பத்தாவது இடத்தில் இருக்கிறது. சென்னை அணியின் கேப்டனாக இருந்த ருத்ராஜுக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதற்கு பதிலாக தோனி கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் நிகழ்வின்போது தோனியிடம் அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடுவீர்களா என்று அவரிடம் கிரிக்கெட் வர்ணனையாளர் டேனி மோரிஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு சிரித்தவாறு பதில் அளித்த தோனி, “அடுத்த போட்டிக்கே திரும்ப வருவேனா என்று எனக்கு தெரியாது” என்று கூறினார்.

டைமிங்கில் தோனி அளித்த இந்த பதில் வர்ணனையாளருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. சர்வதேச போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் ஏராளமான சாதனை படைத்துள்ள தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். அவர் அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்று ஒரு தரப்பினரும், இதுவரை அவர் நிறைய சாதித்து விட்டார் இனி ஓய்வு எடுக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

First Published :

April 30, 2025 10:47 PM IST

Read More

Previous Post

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மோடியின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!

Next Post

அதிக தங்கம் கையிருப்பு: உலகளவில் இந்தியா 7-வது இடம் | India ranks 7th in the world in terms of gold reserves

Next Post
அதிக தங்கம் கையிருப்பு: உலகளவில் இந்தியா 7-வது இடம் | India ranks 7th in the world in terms of gold reserves

அதிக தங்கம் கையிருப்பு: உலகளவில் இந்தியா 7-வது இடம் | India ranks 7th in the world in terms of gold reserves

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin