கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன்கள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை செளரவ் கங்குலி, பிரெண்டன் மெக்கல்லம், கெளதம் கம்பீர், தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன், ஷ்ரேயாஸ் ஐயர், நிதீஷ் ராணா ஆகியோர் வழி நடத்தியுள்ளனர். இதில் கெளதம் கம்பீர் 2 முறையும், ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு முறையும் அணிக்கு கோப்பை வென்று கொடுத்துள்ளனர். இயான் மோர்கன் அணிக்கு ரன்னர் அப் கோப்பை வென்றுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்ற சாம்பியன் பட்டங்களில் இரண்டு முறை சென்னை சேப்பாக்கத்தில் நிகழ்ந்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தை உள்ளூர் ஆடுகளமாக வைத்திருக்கும் சிஎஸ்கே கூட இங்கு இரண்டு முறை கோப்பை வென்றதில்லை.

