Last Updated:
சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய பாரத் இந்து முன்னணி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையைக் காக்கும் வகையில் சென்னையில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை வேல் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்கா இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீண்டும் இதுகுறித்து பிரச்சனை எழுப்புவது தேவையில்லாதது என்றும் வாதிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட நீதிமன்ற நிபந்தனையை மீறி மத நல்லிணத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்கக் கூடாது எனவும் முறையிட்டார்.
அரசு தரப்பு வாதத்தை ஏற்ற உயர்நீதிமன்றம், பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் எந்த போராட்டத்துக்கும் அனுமதி வழங்கக் கூடாது எனக்கூறி, சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க : ஜூலை 16-ல் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் – அமைச்சர் சேகர்பாபு!
இதனை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி திரிவேதி தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Delhi,Delhi,Delhi
March 24, 2025 3:27 PM IST
