• Login
Tuesday, June 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும் – அதிகாரிகளுக்கு அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 16, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும் – அதிகாரிகளுக்கு அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க, இன்று ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் நீர்வளத் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வு செய்யப்பட்டன

மேற்படி கூட்டத்தில் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் புதிய பாசன கட்டமைப்பு பணிகள், ஏற்கனவே உள்ள பாசன கட்டமைப்புகளை சீரமைக்கும் பணிகள், நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டப்பணிகள், வெள்ள தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், அணை மேலாண்மை, கடல் அரிப்பு தடுப்பு நடவடிக்கைகள், நீர்நிலைகளை புணரமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான பணிகள், ஆண்டுதோறும் நடைபெறும் பராமரிப்பு பணிகள், தூர்வாரும் பணிகள், பருவமழைக்கு முந்தைய பணிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

அறிவுறுத்தினார்

மேலும், சென்னையின் வெள்ள தணிப்பு பணிகள், முந்தைய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பணிகள், புதியதாக அறிவிக்கப்பட்ட பணிகள், நிதி ஆதாரங்கள் போன்றவையும் ஆய்வு செய்யப்பட்டன. பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

துறை ரீதியான நடவடிக்கை

எதேனும் புகார்கள் வரப்பெற்றால் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென துறையின் முதன்மை செயலாளருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வு கூட்டத்தில் நீர்வளத்துறையின் அரசு முதன்மை செயலாளர் முனைவர் சத்திய பிரத சாகு, நீர்வளத்துறையின் அரசு சிறப்பு செயலாளர், சு. ஸ்ரீதரன், நீர்வளத்துறையின் முதன்மை தலைமை பொறியாளர் எஸ். கோபாலகிருஷ்ணன், நீர்வளத்துறையின் மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் செயல்பாட்டு தலைமை பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Previous articleஜி.டி. நாயுடு: இந்தியாவின் எடிசன் …
Next articleசூடானில் டிரோன் தாக்குதல் அதிகரிப்பு: 1,000க்கும் மேற்பட்டோர் பலி
tamiltamil



Read More

Previous Post

சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருப்பவர்களா? – இத அவசியம் தெரிஞ்சுக்கோங்க…

Next Post

ஜனாதிபதிக்கும் CHEC தலைவருக்கும் இடையில் சந்திப்பு

Next Post
ஜனாதிபதிக்கும் CHEC தலைவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் CHEC தலைவருக்கும் இடையில் சந்திப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin