சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் 2025 ஆகஸ்ட் 1, முதல் புதிய வளாகத்தில் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்ணா சாலையில் உள்ள பிரெஸ்டீஜ் பாலிகான் கட்டடத்தின் 9வது தளத்தில் துணைத் தூதரகம் செயல்படும் என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் புதிய முகவரி
- பிரெஸ்டீஜ் பாலிகான், 9வது தளம்
- அண்ணா சாலை
- சென்னை – 600035
தொடர்பு விவரங்கள்
- தொலைபேசி எண்: +91 44243 20050
- மின்னஞ்சல் முகவரி: [email protected]
- இணைய முகவரி: www.mfa.gov.sg/chennai
துணைத் தூதரகம் இயங்கும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.
அதே போல, சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என்பதையும் அது குறிப்பிட்டது.
தற்போதைய வளாகத்திலிருந்து துணைத் தூதரக அதிகாரிகள் அதன் புதிய முகவரிக்கு இன்றும் (ஜூலை 30) நாளையும் (ஜூலை 31) மாறுவார்கள். எனவே இந்த நேரத்தில் துணைத் தூதரகம் மூடப்பட்டு இருக்கும்.
உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் அதன் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் – +91-984-003-3136
4D லாட்டரி மோகம்.. “7217” என்ற எண்ணுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் போட்டாபோட்டி – ஏன் தெரியுமா?