Last Updated:
விமானங்களின் சேவையை ஏர் இந்தியா உள்ளிட்ட சில நிறுவனங்கள் குறைத்துள்ளதால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வால் சென்னையில் இருந்து இயக்கப்படும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் சேவையை ஏர் இந்தியா உள்ளிட்ட சில நிறுவனங்கள் குறைத்துள்ளதால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மேற்காசியாவில் நிலவிய போர் சூழல் எதிரொலியாக விமானங்களுக்கான எரிபொருள் விலை கடுமையாக உயர்த்துள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் விமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் சேவைகளை வெகுவாகக் குறைத்து வருகின்றன. அந்த வகையில், புதன்கிழமை அன்று சென்னையில் இருந்து சிங்கப்பூர், துபாய், இலங்கை, சார்ஜா செல்லும் விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் திடீரென ரத்து செய்தது.
சென்னையில் இருந்து ஹைதராபாத், திருவனந்தபுரம், அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், திருச்சி, கோவை செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். இவைமட்டுமின்றி, சென்னை – சேலம் இடையே 4 விமான சேவைகள் இருந்த நிலையில் 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை – தூத்துக்குடி இடையேயான 12 விமான சேவைகள், படிப்படியாக 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை – அந்தமான் இடையேயான 14 சேவைகளையும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முற்றிலுமாக நிறுத்தியுள்ளன. இந்நிலையில், நிலைமை சீரானதும் குறைக்கப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் இருந்து இயக்கப்படும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் சேவையை ஏர் இந்தியா உள்ளிட்ட சில நிறுவனங்கள் குறைத்துள்ளதால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைப்பு.. பயணிகள் அவதி.. என்ன காரணம் தெரியுமா?

