• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சென்செக்ஸ் ஒரே நாளில் 3,000 புள்ளிகள் அதிகரிப்பு: சந்தை நிபுணர்கள் கூறுவது என்ன? | Stock markets log biggest single-day rise after suspension of India-Pak hostilities

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சென்செக்ஸ் ஒரே நாளில் 3,000 புள்ளிகள் அதிகரிப்பு: சந்தை நிபுணர்கள் கூறுவது என்ன? | Stock markets log biggest single-day rise after suspension of India-Pak hostilities
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு கடந்த சனிக்கிழமை மாலை வெளியானது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று போர் நிறுத்தத்தின் தாக்கம் எதிரொலித்தது. ஒரே நாளில் சென்செக்ஸ் சுமார் 3,000 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், “இந்திய பங்குச் சந்தையின் ராக்கெட் வேக எழுச்சிக்கு இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் முதன்மையான காரணம். அதுதவிர, இந்தியா -இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம், பரஸ்பர நிதியின் வலுவான தரவுகள், எப்ஐஐ-க்களின் வரவு போன்றவையும் சந்தைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தன. மும்பை பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் அதிகரித்து 82,429 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 916 புள்ளிகள் உயர்ந்து 24,924 புள்ளிகளில் நிலைத்தது. அமெரிக்கா – சீனா நாடுகள் பரஸ்பரம் வரியை குறைத்ததும் இதற்கு காரணம்” என்றனர்.

அமெரிக்காவில் மருந்து விலை 90% குறைப்பு: அமெரிக்காவில் மக்கள் பயன்பெறும் வகையில் மருந்துகளின் விலை 59 முதல் 90 சதவீதம் வரை குறைக்க அதிபர் ட்ரம்ப் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, நிப்டி பார்மா குறியீடு வர்த்தகத்தின் இடையே 495 புள்ளிகள் சரிந்தது பயோகான், சுவென் பார்மா, அர்பிந்தோ, லூபின், திவிஸ், கிளென்மார்க் உள்ளிட்ட மருந்து துறை நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.

தங்கம் விலை குறைந்தது: இதற்கிடையே, சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.2,360 குறைந்து, ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.295 குறைந்து 8,750-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் நேற்று மாலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.110 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது.



Read More

Previous Post

ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்: ஆறு இடங்களில் நடத்த பிசிசிஐ திட்டம்! | TATA IPL 2025 action is all set to resume on 17th May

Next Post

Amritsar: இருள் சூழ்ந்த பஞ்சாப் அமிர்தசரஸ்; 'அச்சம் வேண்டாம்' – காவல்துறை விளக்கம்

Next Post
Amritsar: இருள் சூழ்ந்த பஞ்சாப் அமிர்தசரஸ்; 'அச்சம் வேண்டாம்' – காவல்துறை விளக்கம்

Amritsar: இருள் சூழ்ந்த பஞ்சாப் அமிர்தசரஸ்; 'அச்சம் வேண்டாம்' - காவல்துறை விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin