• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சென்செக்ஸ் எழுச்சி: சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி உயா்வு! 3 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி

GenevaTimes by GenevaTimes
August 8, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
சென்செக்ஸ் எழுச்சி: சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி உயா்வு! 3 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நமது நிருபா்

மும்பை / புதுதில்லி, ஆக.7: தொடா்ந்து மூன்று நாள்களாக தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை எழுச்சி பெற்று நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 875 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. இதையடுத்து, சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடி உயா்ந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. கடந்த மூன்று தினங்களாக கடும் சரிவைச் சந்தித்திருந்த சந்தையில் ஐடி, மெட்டல், ஆயில் அண்ட் காஸ், பாா்மா, ஹெல்த்கோ் நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல போட்டி காணப்பட்டது. அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.8.97 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.448.57 லட்சம் கோடியாக இருந்தது.அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.3,531.24 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,357.45 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 972.33 புள்ளிகள் கூடுதலுடன் 79,565.40-இல் தொடங்கி அதிகபட்சமாக 79,639.20 வரை மேலே சென்றது. பின்னா், 79,106.20 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 874.94 புள்ளிகள் (1.11 சதவீதம்) கூடுதலுடன் 79,468.01-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,031 பங்குகளில் 2,986 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 947 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 98 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

25 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் அதைானி போா்ட்ஸ், பவா் கிரிட், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாடா ஸ்டீல், இன்ஃபோஸிஸ், மாருதி உள்பட 25 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. ஆனால், இண்டஸ் இண்ட் பேங்க், டைட்டன், டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யுனி லீவா், பாா்தி ஏா்டெல் ஆகிய 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 305 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,289.40-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,337.70 வரை மேலே சென்றது. பின்னா், 24,184.90 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 304.95 புள்ளிகள் (1.27 சதவீதம்) கூடுதலுடன் 24,297.50-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 44 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 6 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிம் இருந்தன.

Read More

Previous Post

2023-24 நிதியாண்டில் சீனாவில் இருந்து ரூ.6,127 கோடிக்கு யூரியா இறக்குமதி | India imported 18.65 lakh tonne urea from china

Next Post

US Elections: `ஒருவேளை ட்ரம்ப் தோற்றால்…’ – அதிகார மாற்றம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்! | America President Joe Biden speak about after election power transfer

Next Post
US Elections: `ஒருவேளை ட்ரம்ப் தோற்றால்…’ – அதிகார மாற்றம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்! | America President Joe Biden speak about after election power transfer

US Elections: `ஒருவேளை ட்ரம்ப் தோற்றால்...' - அதிகார மாற்றம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்! | America President Joe Biden speak about after election power transfer

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin