கோலாலம்பூர்,
இரண்டு மாதங்களுக்கு முன்னர் செந்தூலில் இடம்பெற்ற சாலை சண்டையில் ஒருவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் காவலாளி ஒருவர் மீது, இன்று (ஜூலை 7) கோலாலம்பூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
39 வயதான கே. நாகேந்திரன் மீது, மே 25 அன்று இரவு 9.23 மணியளவில் செந்தூல், தாமன் இந்தான் பைடூரி பகுதியில் கே. குமரன் (44) என்பவரை சாலை ஓரத்தில் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதை நாகேந்தின் புரிந்துகொண்டதாகத் தலை அசைத்தார். எனினும், இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் கீழ்வருவதால், அவரிடம் வாதம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வழக்கு, குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கட்டாய மரணதண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறை, மற்றும் மரணதண்டனை விதிக்கப்படாவிட்டால் குறைந்தது 12 பிரம்படிகள் எனக் கூறப்படுகிறது.
மரண பரிசோதனை அறிக்கைக்காக வழக்கு செப்டம்பர் 10ஆம் தேதி மறு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
The post செந்தூலில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொலை – காவலாளி மீது கொலை குற்றச்சாட்டு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.