Last Updated:
செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு, 20க்கும் மேற்பட்டோர் காயம்; நரேந்திர மோடி, மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி இரங்கல்.
டெல்லி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 பகுதி அருகே இன்று மாலை சுமார் 7 மணி அளவில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். 13 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இந்தச் சம்பவத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது;
Condolences to those who have lost their loved ones in the blast in Delhi earlier this evening. May the injured recover at the earliest. Those affected are being assisted by authorities. Reviewed the situation with Home Minister Amit Shah Ji and other officials.@AmitShah
— Narendra Modi (@narendramodi) November 10, 2025
பிரதமர் நரேந்திர மோடி, “இன்று மாலை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
दिल्ली के लाल किला मेट्रो स्टेशन के पास हुए कार विस्फोट की ख़बर बेहद दर्दनाक और चिंताजनक है। इस दुखद हादसे में कई निर्दोष लोगों की मृत्यु का समाचार अत्यंत दुखद है।
इस दुख की घड़ी में अपने प्रियजनों को खोने वाले शोक संतप्त परिवारों के साथ खड़ा हूं और उनको अपनी गहरी संवेदनाएं…— Rahul Gandhi (@RahulGandhi) November 10, 2025
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடிப்புச் செய்தி மிகவும் மனவேதனையையும் கவலையையும் தருகிறது. இந்த துயர சம்பவத்தில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த துக்கத்தை அளிக்கிறது.
இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடன் நான் நிற்கிறேன், அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Shocked and deeply pained by the explosion near Delhi’s Red Fort that has taken several innocent lives. Visuals from the site are truly heartbreaking.
My heartfelt condolences to the bereaved families and my thoughts are with those battling injuries. Wishing them strength and a…— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 10, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். டெல்லியில் இருந்து வரும் காட்சிகள் இதயத்தை நொறுக்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
लाल किले के पास हुए धमाके की खबर बेहद चिंताजनक है। बताया जा रहा है कि इसमें कुछ लोगों की जान भी गई है, ये बेहद दुखद है।
पुलिस और सरकार को तुरंत इसकी जांच करनी चाहिए कि ये धमाका कैसे हुआ और क्या इसके पीछे कोई बड़ी साजिश तो नहीं है। दिल्ली की सुरक्षा को लेकर लापरवाही बर्दाश्त नहीं… https://t.co/LWFm0HoDKK— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 10, 2025
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரீவால், “செங்கோட்டை அருகே நடந்த வெடிவிபத்து மிகுந்த கவலையளிக்கிறது. சிலர் இதில் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது, இது மிகவும் துயரமானது.
இந்த வெடிப்பு எவ்வாறு நிகழ்ந்தது, இதற்குப் பின்னால் ஏதேனும் பெரிய சதி இருக்கிறதா என்பதை காவல்துறையும் அரசாங்கமும் உடனடியாக விசாரிக்க வேண்டும். டெல்லியின் பாதுகாப்பு குறித்த அலட்சியத்தை பொறுத்துக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
The car blast incident in Delhi is extremely painful and disturbing. At this moment of immense grief, I extend my sincerest condolences to the families of the deceased. Praying for the speedy recovery of those injured.
— Rajnath Singh (@rajnathsingh) November 10, 2025
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் மிகவும் வேதனையானது மற்றும் கவலையளிக்கிறது. பெரும் துயரமான இந்த தருணத்தில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Delhi,Delhi,Delhi
November 10, 2025 10:01 PM IST


