• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செங்கடல் பிராந்திய போரில் இத்தாலி! மறுக்கும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர்

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
செங்கடல் பிராந்திய போரில் இத்தாலி! மறுக்கும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை என அந்நாட்டு
வெளிவிவகார அமைச்சர் அந்தோனியோ தாஜானி தெரிவித்துள்ளார்.



இருப்பினும், அந்த முக்கிய கடல் வழியில் வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாக்கும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.


அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில் இத்தாலியப் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததாக
வெளியான செய்திகள் மற்றும் இத்தாலியுடன் தாங்கள் போரில் ஈடுபடவில்லை என்ற ஹவுதி
அமைப்பினரின் அறிக்கைகள் குறித்து இத்தாலிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய
நேர்காணலிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடற்படை நடவடிக்கை


சவூதி அரேபியாவிலுள்ள தாயிஃப் (Taif) விமானப் படைத்தளத்தின் மீது ஹவுதி
அமைப்பினர் நடத்திய தாக்குதலில், தரையிறக்கப்பட்டிருந்த இத்தாலியின் F-2000
(Eurofighter) ரகப் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படும்
நிலையிலேயே வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

செங்கடல் பிராந்திய போரில் இத்தாலி! மறுக்கும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் | Italy In The Red Sea Region Conflict



செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தேப் நீரிணை ஊடாகப் பயணிக்கும் வர்த்தகக்
கப்பல்களை ஹவுதி தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காகவே ஐரோப்பிய ஒன்றியத்தின்
‘அஸ்பைட்ஸ்’ பாதுகாப்புக் கடற்படை நடவடிக்கை உருவாக்கப்பட்டது.


இந்நீரிணைப் பகுதியில் நிலைமை மோசமடைந்து வரும் பின்னணியில், இத்தாலி
தொடர்ந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் எனக் குறிப்பிட்ட அமைச்சர்,
இத்திட்டத்தைப் புதுப்பித்து வலுப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.



இத்தாலியின் ஒட்டுமொத்த கடல்சார் வர்த்தகப் போக்குவரத்தில் 40 சதவீதமானவையும்,
ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 60 சதவீதமானவையும்
செங்கடல் வழியாகவே கடந்து செல்வதால், இந்தப் பிராந்தியத்தில் தமது நாட்டிற்கு
பலமான மூலோபாய நலன் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

தற்போதைய அரசியல் சூழல் பல்வேறு மறுசீரமைப்புகளுக்கு வழிவகுக்கும் – பஹ்மி – Malaysiakini

Next Post

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ருதுராஜ்.. 2023ல் ஆதரவாக நிற்காத பிசிசிஐ.. பாவம்யா அஜித் அகர்கர்! | Ajith Agarkar Pushed for Gaikwad as Ireland T20 Captain in 2023, but BCCI Appointed Returning Bumrah

Next Post
துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ருதுராஜ்.. 2023ல் ஆதரவாக நிற்காத பிசிசிஐ.. பாவம்யா அஜித் அகர்கர்! | Ajith Agarkar Pushed for Gaikwad as Ireland T20 Captain in 2023, but BCCI Appointed Returning Bumrah

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ருதுராஜ்.. 2023ல் ஆதரவாக நிற்காத பிசிசிஐ.. பாவம்யா அஜித் அகர்கர்! | Ajith Agarkar Pushed for Gaikwad as Ireland T20 Captain in 2023, but BCCI Appointed Returning Bumrah

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin