Last Updated:
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 16 ஆவது லீக் போட்டியில் மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நேற்று நடந்த லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த லக்னோ வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 203 ரன்கள் சேர்த்தனர்.
அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன்களும், மார்க்கரம் 53 ரன்களும், ஆயுஷ் பதோனி 30 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை அபாரமாக வீழ்த்தினார்.
இதையடுத்து 204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் ஆட்டம் தொடக்கத்தில் அட்டகாசமாக இருந்தாலும் 15 ஓவர்களுக்கு பிறகு பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். நமன் தீர் 24 பந்துகளில் அதிரடியாக 46 ரன்கள் எடுக்க, சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார்.
ஒரு கட்டத்தில் மும்பை அணிக்கு 24 பந்துகளில் 52 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டை இழந்தார். இவரது விக்கெட்டிற்கு பிறகு, டெல்லி அணியின் கையில் ஆட்டம் வந்தது. குறிப்பாக 19 ஆவது ஓவரை நேர்த்தியாக வீசிய ஷர்துல் தாகூர் லக்னோ பக்கம் வெற்றியை கொண்டு வந்தார்.
இதையும் படிக்க: “இந்த அறையில் இருக்கும் அழகான பெண்…” – புதிய காதலி குறித்து ஓபனாக சொன்ன ஷிகர் தவான்..!
கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய ஆவேஷ் கான், மும்பை அணியின் வெற்றியை தட்டிப்பறித்தார். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டபோது கேப்டன் ஹர்திக் பாண்ட்யா களத்தில் இருந்தபோதும் இலக்கை எட்ட முடியாமல் போனது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
April 05, 2025 8:36 AM IST


