Last Updated:
பிரான்ஸில் சூப்பர் மார்க்கெட் குளிர்சாதன பெட்டிகளை ஹேக்கர்கள் முடக்கியதால் உணவுப் பொருட்கள் வீணாகின. பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு உத்தரவின்பேரில் விசாரணை நடக்கிறது.
பிரான்ஸில் முன்னணி சூப்பர் மார்க்கெட்களில் உள்ள குளிர்சாதன பெட்டிகள் மற்றும் ஃப்ரீஸர்களை ஹேக்கர்கள் முடக்கியதால் ஏராளமான உணவுப் பொருட்கள் வீணாகின.
Intermarch உட்பட நாட்டின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனங்களில் உள்ள குளிர்சாதன பெட்டிகள் இணைய வழியாக கட்டுப்படுத்தும் வகையில் உள்ளன. இந்த Connected குளிர்சாதன பெட்டிகளை இயக்கும் இணையதளத்தை ஹேக் செய்த சைபர் குற்றவாளிகள், அவற்றின் வெபநிலையை 50 முதல் 80 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தி உள்ளனர்.
அதீத வெப்பத்தால், குளிர்சாதன பெட்டியில் இருந்த டன் கணக்கிலான உணவுப் பொருட்கள் உருகி வீணானதுடன், பல சூப்பர் மார்க்கெட்களில் தீ விபத்து ஏற்பட்டது. குறிப்பாக Intermarch நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 150 கடைகளில் உள்ள ஃப்ரிட்ஜ்களில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீணான உணவுப் பொருட்கள் குப்பையில் கொட்டப்பட்டன.

