• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சூட்சமத்தை அறிந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆஃப்கானை அலறவிட்ட இந்திய அணி.. மக்கள் கேப்டன் காலம் தொடங்கிருச்சு! | Shreyas Iyer: Finally Shreyas Iyer find the secret of Winning in the T20 Cricket with Team India

GenevaTimes by GenevaTimes
September 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சூட்சமத்தை அறிந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆஃப்கானை அலறவிட்ட இந்திய அணி.. மக்கள் கேப்டன் காலம் தொடங்கிருச்சு! | Shreyas Iyer: Finally Shreyas Iyer find the secret of Winning in the T20 Cricket with Team India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Tuesday, September 15, 2026, 23:19 [IST]

டெல்லி: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான டி20 தொடரை இழந்த இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியுள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. இந்திய அணிக்காக சிறப்பாக பவுலிங் ஆடிய நிதிஷ் ரெட்டி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Shreyas iyer

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அசத்தினார். கடைசி வரை களத்தில் நின்ற இஷான் கிஷன் 23 பந்துகளில் 38 ரன்களை எடுத்து அசத்தினார். இதன் மூலமாக இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தி இருக்கிறது.

இதனால் இந்திய டி20 கிரிக்கெட்டில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் அத்தியாயம் தொடங்கிவிட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்றார். தொடர்ந்து முதல்முதலாக அயர்லாந்து அணியிடம் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி டி20 தொடரை இழந்தது.

இதன்பின் இங்கிலாந்து அணியிடமும் டி20 தொடரை இந்திய அணி இழந்தது. இதனால் இந்திய அணி டிரான்ஷிஷனில் இருப்பதாக பயிற்சியாளர் கம்பீர் பேசி இருந்தார். ஆனால் ஜிம்பாப்வே டி20 தொடரில் இந்திய அணி விவிஎஸ் லக்‌ஷமண் பயிற்சியின் கீழ் ஆடியது. அதனை இந்திய அணி முழுமையாக கைப்பற்ற, தற்போது ஆஃப்கானிஸ்தான் தொடரையும் இந்திய அணி வென்று சாதித்துள்ளது.

அடுத்தடுத்து 2 டி20 தொடர்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி வெற்றிப் பயணத்தை தொடர்ந்திருக்கிறது. இதன் மூலமாக இந்திய அணியை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கட்டமைத்துவிட்டதாகவும், வெற்றிக்கான சூட்சமத்தை கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துவிட்டதாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

English summary

Shreyas Iyer: Finally Shreyas Iyer find the secret of Winning in the T20 Cricket with Team India

Read More

Previous Post

உலகச் சாம்பியன் ரூமேஷ் தரங்கவிற்கு புதிய ஈட்டிகள்

Next Post

UPI: 300 ரூபாய் கட்டணம்.. யாருக்கு இந்த பணம் போகிறது..? மக்களுக்கு தான் அதிக சேதம்.. எப்படி? | UPI MDR Charges Explained: Who Gets the 0.4% Fee and How It Could Impact common man

Next Post
UPI: 300 ரூபாய் கட்டணம்.. யாருக்கு இந்த பணம் போகிறது..? மக்களுக்கு தான் அதிக சேதம்.. எப்படி? | UPI MDR Charges Explained: Who Gets the 0.4% Fee and How It Could Impact common man

UPI: 300 ரூபாய் கட்டணம்.. யாருக்கு இந்த பணம் போகிறது..? மக்களுக்கு தான் அதிக சேதம்.. எப்படி? | UPI MDR Charges Explained: Who Gets the 0.4% Fee and How It Could Impact common man

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin