• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு 3 மடங்காக அதிகரிப்பு | Indian investment in Swiss banks increases threefold

GenevaTimes by GenevaTimes
June 20, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு 3 மடங்காக அதிகரிப்பு | Indian investment in Swiss banks increases threefold
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சு​விஸ் வங்​கி​யில் இந்​தி​யர்​கள் பதுக்​கும் பணத்​தின் அளவு கடந்த ஆண்டு 3 மடங்​காக அதி​கரித்​துள்ள தகவல் வெளி​யாகி உள்​ளது.

சர்​வ​தேச அளவில் சுவிட்​சர்​லாந்து நாடு சுற்​றுலா​வுக்கு புகழ்​பெற்​றுள்​ளது. அத்​துடன் பெரும் பணக்​காரர்​கள் விரும்​புவது சுவிஸ் வங்​கி​கள்​தான். சுவிஸ் வங்​கி​களில் முதலீடு செய்​பவர்​களின் விவரங்​கள் வெளி​யிடப்​படு​வ​தில்​லை. அதுவே பணக்​காரர்​களுக்கு பாது​காப்​பாக கருதப்​படு​கிறது. அத்​துடன், கரன்​சி​யின் மதிப்பு குறைந்​தா​லும், பொருளா​தார நெருக்​கடி, அரசி​யல் ஸ்திரமற்ற நிலை ஏற்​பட்​டாலும், முதலீட்​டாளர்​களின் பணத்​துக்கு சுவிஸ் வங்​கி​கள் பாது​காப்பு வழங்​கு​கின்​றன. இது​போன்ற பல்​வேறு காரணங்​களால் அரசி​யல்​வா​தி​கள், நடிகர்​கள், நடிகைகள், தொழில​திபர்​கள், கோடீஸ்​வர்​கள் என பல தரப்​பினரும் சுவிஸ் வங்​கி​களில் பெரும் பணத்தை போட்டு வைக்​கின்​றனர்.

அது​போல் இந்​திய பிரபலங்​கள் பலரும் சுவிஸ் வங்​கி​களில் கோடிக்​கணக்​கில் பணம் வைத்​துள்​ள​தாக​வும், இந்​தி​யா​வில் வரி ஏய்ப்பு செய்து கறுப்பு பணத்தை எல்​லாம் சுவிஸ் வங்​கி​களில் பதுக்கி வைப்​ப​தாக​வும் பல ஆண்​டு​களாக குற்​றம் சாட்​டப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் சுவிஸ் தேசிய வங்கி வெளி​யிட்ட ஆண்​டறிக்​கை​யில், கடந்த ஆண்டு இந்​தி​யர்​கள் சுவிஸ் வங்​கி​களில் முதலீடு செய்த பணம் 3 மடங்கு அதி​கரித்​துள்​ள​தாக தெரி​வித்​துள்​ளது. அதாவது, கடந்த 2024-ம் ஆண்டு 3.5 பில்​லியன் பிராங்க் (சு​விஸ் கரன்​சி) அளவுக்கு இந்​தி​யர்​கள் சுவிஸ் வங்​கி​களில் முதலீடு செய்​துள்​ளனர். இது இந்​திய ரூபாய் மதிப்​பில் ரூ.37,600 கோடி​யாகும். கடந்த 2021-ம் ஆண்​டுக்​குப் பிறகு இந்​தி​யர்​கள் செய்​துள்ள அதி​கபட்ச முதலீ​டாகும். அதே​நேரத்​தில் இந்​திய வாடிக்​கை​யாளர்​கள் தனி நபர்​களின் பெயர்​களில் உள்ள பணம் இந்​திய மதிப்​பில் ரூ.3,675 கோடி மட்​டுமே உள்​ளது. இவ்​வாறு சுவிஸ் தேசிய வங்கி ஆண்​டறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யர்​கள் பலர் வரி ஏய்ப்பு செய்​தும் சட்​ட​விரோத நடவடிக்​கைகள் மூல​மும் பெறும் கறுப்​புப் பணத்தை சுவிஸ் வங்​கி​களில் டெபாசிட் செய்து வரு​வ​தாக தொடர்ந்து குற்​றம் சாட்​டப்​பட்டு வரு​கிறது.

ஆனால், சுவிஸ் வங்​கி​யில் டெபாசிட் செய்​யப்​படும் பணம் அத்​தனை​யும் கறுப்​புப் பணம் இல்​லை. அதே​நேரத்​தில் வரி ஏய்ப்​பு​களுக்கு எதி​ராக இந்​தியா எடுக்​கும் நடவடிக்​கைகளுக்கு ஆதரவு அளிப்​போம் என்று சுவிஸ் வங்கி நிர்​வாகம் கூறி​யுள்​ளது. இதுதொடர்​பான விவ​காரத்​தில் கடந்த 2018-ம் ஆண்​டில் இந்​தி​யா​வுக்​கும் சுவிட்​சர்​லாந்​துக்​கும் இடை​யில் தகவல் பரி​மாற்ற ஒப்​பந்​தம் ஏற்​படுத்​தப்​பட்​டது. அதன்​படி, சுவிஸ் வங்​கி​களில் இந்​தி​யர்​கள் யார் யார் கணக்கு வைத்​துள்​ளனர். எவ்​வளவு பணம் டெபாசிட் செய்து வைத்​துள்​ளனர் என்ற விவரங்​களை இந்​திய அரசுக்கு சுவிஸ் அரசு வழங்கி வரு​கிறது.



Read More

Previous Post

ரூ.7.42 கோடி மோசடி வழக்கு: மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவர் கைது | Maharashtra IPS officer husband arrested by Mumbai Police

Next Post

2 பாக். விமான தளத்தை தாக்கிய பிறகு போர் நிறுத்தத்துக்கு முன்வந்தோம்: பாகிஸ்தான் துணைப் பிரதமர் ஒப்புதல் | India attacked 2 major air bases: Pakistan Deputy PM

Next Post
2 பாக். விமான தளத்தை தாக்கிய பிறகு போர் நிறுத்தத்துக்கு முன்வந்தோம்: பாகிஸ்தான் துணைப் பிரதமர் ஒப்புதல் | India attacked 2 major air bases: Pakistan Deputy PM

2 பாக். விமான தளத்தை தாக்கிய பிறகு போர் நிறுத்தத்துக்கு முன்வந்தோம்: பாகிஸ்தான் துணைப் பிரதமர் ஒப்புதல் | India attacked 2 major air bases: Pakistan Deputy PM

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin