• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை 10 ஆண்டுகளில் 18% குறைந்தது! | Indian Deposits In Swiss Banks Dropped 18% Over Last 10 Years

GenevaTimes by GenevaTimes
June 20, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை 10 ஆண்டுகளில் 18% குறைந்தது! | Indian Deposits In Swiss Banks Dropped 18% Over Last 10 Years
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சுவிஸ் தேசிய வங்கி (SNB) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை சுமார் 18 சதவீதம் குறைந்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் தோராயமாக 425 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் இந்தியர்களின் வைப்புத் தொகையாக இருந்தது. 2024-இல் இது 346 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாகக் குறைந்துள்ளது.

கோவிட் காலகட்டத்தில் இந்திய வைப்புத் தொகை சுமார் 602 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் என கடுமையாக உயர்ந்தது. என்றபோதிலும், கரோனா தொற்றுநோய் உச்சத்துக்குப் பிறகு வைப்புத் தொகை குறையத் தொடங்கியது. 2023-ஆம் ஆண்டில், வைப்புத் தொகை 309 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக இருந்தது. 2024-ஆம் ஆண்டில், இது 37 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அதிகரித்து 346 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை எட்டியது. இந்த வருடாந்திர உயர்வு இருந்தபோதிலும், கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக குறைந்தே உள்ளது.

வைப்புத் தொகை சரிவு இந்தியாவுக்கு மட்டும் ஏற்படவில்லை. உலகின் பல முக்கிய பொருளாதாரங்களிலும் சுவிஸ் வங்கி இருப்பு குறைந்துள்ளது. இங்கிலாந்து நாட்டினரின் வைப்புத் தொகை 2015 இல் 44 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாக இருந்தது. 2024-இல் அது 31 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாகக் குறைந்தது. அதே காலகட்டத்தில் சீன நாட்டினரின் வைப்புத் தொகை 5.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகளிலிருந்து 4.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாகக் குறைந்தன. பாகிஸ்தானியர்களின் வைப்புத் தொகை 2015-இல் 947 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக இருந்தது. 2024-இல் அது 241 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாகக் குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 75 சதவீத சரிவு.

வங்கதேச நாட்டினரின் விஷயத்திலும் இதேபோன்ற போக்கு காணப்பட்டது. சுவிஸ் வங்கிகளில் அவர்களின் வைப்புத் தொகை 2015-இல் 48 மில்லியன் சுவிஸ் பிராங்குகளிலிருந்து 2024-இல் 12.6 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாகக் குறைந்தது. இது 73 சதவீதத்திற்கும் அதிகமான சரிவாகும். சவுதி அரேபிய வைப்புத் தொகை 10 ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது. 2015-இல் 8.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகளிலிருந்து 2024-இல் 4.8 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாகக் குறைந்துள்ளது.

அமெரிக்க நாட்டினரின் வைப்புத் தொகையில் மிக முக்கியமான சரிவு காணப்பட்டது. சுவிஸ் வங்கிகளில் அவர்களின் வைப்புத் தொகை 2015-இல் 64.2 பில்லியன் சுவிஸ் பிராங்குகளிலிருந்து 2024-இல் 24.4 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாகக் கடுமையாகக் குறைந்தது, இது சுமார் 62 சதவீத சரிவாகும்.

பொதுவாக சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டு வைப்புத் தொகை குறைவதையே இத்தகைய சரிவு காட்டுகிறது. கடுமையான விதிமுறைகள், அதிகரித்த கண்காணிப்பு, சர்வதேச நிதி வெளிப்படைத்தன்மை போன்ற பல்வேறு காரணங்களால் இது சாத்தியமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.



Read More

Previous Post

IND vs ENG 1st Test: 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் கம்பேக்.. கங்குலி, டிராவிட், கோலி லிஸ்டில் இணைந்த சாய் சுதர்சன்

Next Post

உலகிலேயே மிக பயங்கரமான அணுகுண்டு எது…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…

Next Post
உலகிலேயே மிக பயங்கரமான அணுகுண்டு எது…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…

உலகிலேயே மிக பயங்கரமான அணுகுண்டு எது...? அவசியம் தெரிஞ்சுக்கோங்க...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin