அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதயம் தொடர்பான திடீர் நோய் நிலைமை ஒன்றின் காரணமாக அவர் குறித்த பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் விசேட மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்தார்.
நோய் நிலைமை
அதன்போது, அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்ததுடன், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் மறுத்திருந்தார்.
இந்த நிலையில், அவரின் நோய் நிலைமை திடீரெ மோசமடைந்ததையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

