ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாக அவரது மனைவி மனோரி சசலே சமர்ப்பித்த கோரிக்கைக்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் அஸ்கிரி பீட மகாநாயக்க வரககொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் கடிதம் எழுதியுள்ளார்.
சுரேஷ் சலேயின் மனைவி 8ஆம் திகதி அஸ்கிரி மகா விகாரைக்கு வருகை தந்து, தனது கணவருக்கு நிவாரணம் வழங்க உதவுமாறு அவரிடம் கோரிக்கை விடுத்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுந்த தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதன்படி, மகா தேரர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், அவரது வேண்டுகோள் அடங்கிய கடிதத்தின் நகல் தனது கடிதத்துடன் இணைப்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த வேண்டுகோளை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்து, தகுந்த தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

