Last Updated:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் சனிக்கிழமை தொடங்குகிறது.
மருத்துவமனையில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், ஒரு வார காலம் சுப்மன் கில் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் சனிக்கிழமை தொடங்குகிறது.
இதில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் புதன்கிழமை கவுகாத்தி செல்லவுள்ள நிலையில், சுப்மன் கில் செல்ல மாட்டார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், சுப்மன் கில் இன்னும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவருக்கு பிசியோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
November 18, 2025 10:17 AM IST


