• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சுந்தர் பிச்சையை விட அதிக சொத்து மதிப்புள்ள இந்திய சிஇஓ; யார் இவர் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
June 9, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
சுந்தர் பிச்சையை விட அதிக சொத்து மதிப்புள்ள இந்திய சிஇஓ; யார் இவர் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புகழ்பெற்ற ஐஐடி கல்லூரியில் சேர்ந்து படிப்பை பாதியிலேயே நிறுத்தினாலும், வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்தவர்களில் ஒருவர்தான் தாமஸ் குரியன். தற்போது கூகுள் க்ளவுடின் (Google Cloud) தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் தாமஸ் குரியன் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையை விட செல்வந்தர் என்பது உங்களுக்கு தெரியுமா?

உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய சிஇஓ-வாக சுந்தர் பிச்சை திகழ்கிறார் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். 2.14 ட்ரில்லியன் மதிப்புள்ள கூகுள் நிறுவனத்தில் 2022-ம் ஆண்டு சுந்தர் பிச்சைக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் மட்டுமே சுமார் 226 மில்லியன் டாலர். அந்த வருடத்தில் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு சுமார் ரூ.10,215 கோடியாக இருந்தது. ஆனால் தாமஸ் குரியனின் சொத்து மதிப்பு ரூ.15,000 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

விளம்பரம்

News18

கேரளாவில் பிறந்த தாமஸ் குரியன் உலகின் மிக வெற்றிகரமான இந்திய நிர்வாகிகளில் ஒருவராக திகழ்கிறார். 2018-ம் ஆண்டு இவர் கூகுள் க்ளவுடின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்றதும் நிறுவனத்தின் செயல் திட்டங்களை மாற்றியமைத்து வாடிக்கையாளர் சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் கவனம் செலுத்தினார். மேலும் விற்பனை அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் சம்பளத்தையும் உயர்த்தினார். கூகுள் க்ளவுட் நிறுவனத்தை புதுப்பித்ததில் இவருக்கு முக்கியமான பங்கிருக்கிறது.

பெங்களூரில் உள்ள புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற தாமஸ் குரியன், சென்னை ஐஐடி-யில் சேர்ந்தார். ஆனால் அங்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே அமெரிக்கவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் படிக்க முடிவு செய்தார். இதன் காரணமாக ஐஐடி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு உடனடியாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு எலக்ட்ரிகல் இஞ்சினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்த தாமஸ் குரியன், அதற்கடுத்து ஸ்டான்ஃபோர்டு ஸ்கூல் ஆஃப் பிசினஸில் சேர்ந்து எம்பிஏ நிறைவு செய்தார். அதன்பிறகு அமெரிக்காவில் உள்ள McKinsey நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார்.

விளம்பரம்

Also read |
12 வயதில் திருமணம்; 2 ரூபாய் சம்பளத்தில் வேலை; இன்று ரூ.900 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் அதிபதி; யார் அவர் தெரியுமா?

சுமார் ஆறு வருடங்களுக்கும் மேலாக McKinsey நிறூவனத்தில் பணியாற்றிய குரியன், அதற்கடுத்து Oracle நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான இங்கு பல முக்கியமான பதவிகளை வகித்த தாமஸ் குரியன், 22 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். 32 நாடுகளில் உள்ள இந்நிறுவனத்தின் கிளைகளில் பணியாற்றும் 35,000 ஊழியர்களை இவர் தலைமையேற்று நடத்தி வந்தார். ஆனால் Oracle நிறுவனத்தின் துணை நிறுவனர் லாரி எலிசனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018-ம் ஆண்டு அங்கிருந்து ராஜினாமா செய்தார். அதன்பின்னரே கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து அவர்களின் க்ளவுட் பிரிவின் சிஇஓ-வாக மாறினார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிடுமா? அதிர்ச்சி தரும் வானிலை தகவல் – News18 தமிழ்

Next Post

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்.. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தீவிரம் | Makkal Osai

Next Post
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்.. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தீவிரம் | Makkal Osai

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்.. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தீவிரம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin