Last Updated:
BJP Shehzad Poonawalla | பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஷாத் பூனவல்லா, 79-ஆவது சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்காதது வெட்கக்கேடான செயல் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
செங்கோட்டையில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின நிகழ்ச்சியில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்காதது வெட்கக்கேடான செயல் என பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஷாத் பூனவல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசிய கொடி ஏற்றிய நிகழ்ச்சியை ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் புறக்கணித்தது பேசுபொருளாகி உள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ராணுவத்தையும், அரசியல் அமைப்பையும் ராகுல் காந்தி அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தானை விரும்பும் ராகுல் காந்தி, தேசத்தையும் காந்தியையும் அவமதித்துவிட்டதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
VIDEO | Delhi: BJP leader Shehzad Poonawalla says, “Today we celebrate our Independence Day, it is a national festival, not just another birthday celebration, but Congress has once again showed that it is not the Indian National Congress, but rather the “Islamabad National… pic.twitter.com/6IVRtjmCo4
— Press Trust of India (@PTI_News) August 15, 2025
ஆகஸ்ட் 15ஆம் தேதி என்பது தேசிய தினம் எனவும் இது தனிநபரின் பிறந்த நாளோ அல்லது கட்சி தொடங்கிய நாளோ இல்லை எனவும் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் போது டெல்லி செங்கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்குக் பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi,Delhi,Delhi
August 15, 2025 6:15 PM IST


