• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி இடமாற்றம்: புதிய திருப்பம்; நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் தகவல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி இடமாற்றம்: புதிய திருப்பம்; நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் தகவல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜோகூர் பாரு:

ஜோகூர், சிகாமாட் (Segamat) பகுதியில் உள்ள சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Sungai Muar) புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கான பணிகள் நில உரிமை (Land Ownership) கட்டத்தை எட்டியுள்ளன.

இவ்விடமாற்ற செயல்முறைகள் தற்போது சிகாமாட் நிலம் மற்றும் சுரங்க அலுவலகத்துடன் (Land and Mines Office) இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று சிகாமாட்டில் இப்பள்ளி நிர்வாகத்துடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் (Fadhlina Sidek) நேரில் கலந்து கொண்டு நிலவரங்களை ஆய்வு செய்தார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

“சிகாமாட் பகுதி தமிழ் மாணவர்கள் பாதுகாப்பான, வசதியான மற்றும் உகந்த சூழலில் கல்வி கற்பதை உறுதி செய்ய கல்வி அமைச்சு காட்டி வரும் அக்கறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி அமைச்சரின் இன்றைய வருகை, இத்திட்டத்தை அரசாங்கம் எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது” என்றார்.

மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டு செகாமட் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், இப்பள்ளியின் உள்கட்டமைப்புப் பிரச்சனைகள், மாணவர் பாதுகாப்பு மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பள்ளி தூரமாக அமைந்திருப்பது போன்ற காரணங்களால், இதனை இடமாற்றம் செய்ய தாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மடானி அரசு கல்வித் துறைக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாகவும், சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய இடத்திற்கு வெற்றிகரமாக மாற்றப்படும் வரை இதன் முன்னேற்றங்களைத் தாம் தொடர்ந்து கண்காணித்து வரவிருப்பதாகவும் யுனேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.



Read More

Previous Post

Iran: தந்தையின் இறுதி சடங்கிற்கு ‘செல்லாத’ மகன் முஜ்தபா கமேனி.. என்ன காரணம்..? | Mojtaba Khamenei Skips Father’s Funeral Over Israeli Threat: Iran Supreme Leader Ayatollah Ali Khamenei Last Rites Begin

Next Post

Tamilmirror Online || மாணவர்களுக்கு கிடைத்துள்ள பாடசாலை விபரம்

Next Post
Tamilmirror Online || மாணவர்களுக்கு கிடைத்துள்ள பாடசாலை விபரம்

Tamilmirror Online || மாணவர்களுக்கு கிடைத்துள்ள பாடசாலை விபரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin