நிபோங் தெபால்:
சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக இன்று காலை 8 மணிக்கு 65 வாக்குச் சாவடிகளைக் கொண்ட ஒன்பது வாக்குப் பதிவு மையங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.
இவை SMK தாசெக்; தேசிய வகை சீனப் பள்ளி (SJKC) பூன் பெங்; பண்டார் தாசெக் முத்தியாரா தொழிற்கல்வி பள்ளி, ஸ்ரீ தாசெக் தேசிய பள்ளி (SK); SK சுங்கை தூரி ; துன் சையத் ஷே பராக்பா தொழிற்கல்வி பள்ளி; SK சுங்கை பாக்காப்; SK ஜாவி மற்றும் SK சுங்கை கெச்சில் ஆகிய இடங்களில் செயற்பட்டுவருகின்றன.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் இன்று மாலை 6 மணிக்கு மூடப்படும். பின்னர் இங்குள்ள தாமான் டேசா ஜாவியில் உள்ள ஜாவி பல்நோக்கு மண்டபத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்த வாக்களிப்பு சுமுகமாக நடைபெற தேர்தல் ஆணையம் (SPR) மொத்தம் 552 அதிகாரிகளை நியமித்தது, அதே நேரத்தில் 800 போலீசார் வாக்குப்பதிவு நாள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (PH ) வேட்பாளர் டாக்டர் ஜூஹாரி ஆரிஃபின் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் (PN ) வேட்பாளராக போட்டியிடும் நிபோங் டெபல் பாஸ் துணைத் தலைவர் அபிடின் இஸ்மாயில் ஆகியோருக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
முன்னதாக மே 24 அன்று வயிறு வீக்கத்தால் PAS இன் நோர் ஜம்ரி லத்தீஃப் காலமானதைத் தொடர்ந்து அந்த இடம் காலியாக அறிவிக்கப்பட்டது.
சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் வாக்களிக்க 57 காவல் துறையினர் உட்பட மொத்தம் 39,279 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .


