நிபோங் தெபால்:
சுங்கை பாக்காப் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களின்போது, 3R (இனம், மதம், அரசு குடும்பம்) சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க சிறப்பு போலீஸ் குழு கண்காணிப்பை மேற்கொள்ளும்.
சம்பந்தப்பட்ட கட்சிகளின் வேட்பாளர் பிரதிநிதிகளுக்கு பிரச்சாரக் காலத்திற்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து போலீசார் விளக்கியுள்ளதாக, இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 21) தெற்கு செபராங் பிறை மாவட்டத் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு காவல்துறைத் தலைவர் கம்யூன் டத்தோ ஹம்சா அமாட் கூறினார்.
இந்நிலையில் நாளைய வேட்புமனு தாக்கலின்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


