சந்தேகநபரிமிருந்து 30 சட்டவிரோத மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, கோட்டையில் உள்ள சுங்கத்துறை தலைமையகத்துக்கு அருகில் வெளிநாட்டு மின் – சிகரெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று முன்தினம் (15) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே, சந்தேகநபர் செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிமிருந்து 30 சட்டவிரோத மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், எட்டியாந்தோட்டையைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


