ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் சுகாதாரத் துறையின் 14 ஊழியர்கள் மீது விசாரணைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அறையில் குளிரூட்டிகள் இல்லாததாலும், மின்விசிறிகள் பயனற்றதாலும், வெப்பம் காரணமாக குழந்தைகள் இறந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
சுகேத் சமூக சுகாதார மையத்தில் மருத்துவ பணியாளர்களின் அலட்சியம் காரணமாக புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், கோட்டா மண்டலத்தின் இணை இயக்குநர் விசாரணை மேற்கொண்டதன் மூலம், துறை ரீதியான நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்று மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரா சிங் தெரிவித்துள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)