களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குபட்ட வர்த்தக நிலையம் ஒன்றில்
விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பில் பொதுமக்கள்
அப்பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு முறையிட்டுள்ளனர்.
மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய அப்பகுதி பொதுசுதார
பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் இன்றயத்தினம் வெள்ளிக்கிழமை(22.05.2026)
குறித்த வர்த்தக நிலையத்தில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது துர்மணம் வீசக்கூடியதாகவும், நிறம் மாறிய நிலையிலும், சுகாதார
சீர்கேடான 18 கலன்களில் உரிய சுட்டுத் துண்டுகள் இன்றியும், தேங்காய் எண்ணெய் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வழக்குத் தாக்கல்
அதனைதொடர்ந்து, குறித்த 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணை கைப்பற்றப்பட்டதோடு
களுவாஞ்சிகுடி பொதுசுகாதார பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது வர்த்தகநிலையத்தின் உரிமையாளருக்கு 40000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும்,
நீதிமன்ற உத்தரவுக்கமைய கைப்பற்றப்பட்ட 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணையும்,
உடன் அழிக்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த.கஜனன்
தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

