Last Updated:
கேரளசு காதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது கேரள காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது கேரள காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் அண்மை காலமாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அலட்சியமாக சிகிச்சை அளிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருவனந்தபுரம் செல்ல கண்ணூர் ரயில் நிலையத்திற்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்க்கு, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியான கேஎஸ்யு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த தொண்டர்கள் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
#WATCH | Kannur: Kerala Health Minister Veena George sustained injuries to her neck and hand during a KSU (Kerala Students’ Union) black flag protest at the Kannur Railway Station. The incident occurred near the ticket counter when the minister arrived to board the Vande Bharat… pic.twitter.com/0hvacLlmLt
— ANI (@ANI) February 25, 2026
அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கிய அமைச்சர் வீணா ஜார்ஜ்க்கு கழுத்து மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டது.
இதையடுத்து கண்ணூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் வீணா ஜார்ஜை சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் பினராயி விஜயன் அவர் மீதான தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது மாணவர் காங்கிரஸ் தாக்குதல்; முதல்வர் பினராயி கண்டனம்


