சிறுவயதில் இருந்து ஆசைப்பட்ட விஷயங்களை வயதான காலத்தில் செயல்படுத்தி பார்ப்பது தற்போது பிரபலமாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள பலருக்கு ஊக்கமளிக்கும் விதமாக ஒரு சிலரது பேஷன் பயணம் தொடர்கிறது. பொதுவாக 50 வயதை கடந்து விட்டாலே வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டு எந்த ஒரு சிக்கல் பிடுங்கல் இல்லாத அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் கிருஷ்ண தாஸ் பால் என்பவர் வித்தியாசமான திட்டங்களை கொண்டிருந்தார்.
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணதாஸ் பால் என்பவர் தனது 60வது வயதில் தனியாக ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது பயணத்தை துவங்கியுள்ளார். இவர் சொந்தமாக SAJ Food. என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
நிறுவனத்தின் பெயரான SAJ என்பது தனது பிள்ளைகளின் பெயர்களில் இருந்து எடுக்கப்பட்ட முதல் எழுத்துக்கள் மூலமாக பெறப்பட்ட ஒரு பெயர். ஷர்மிஷ்தா, அர்ப்பன் மற்றும் ஜெயித்தா ஆகிய மூன்று குழந்தைகளின் பெயர்களில் இருக்கக்கூடிய முதல் எழுத்துக்களை கொண்டு இவர் தனது நிறுவனத்திற்கு பெயர் சூட்டியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் கீழ் சர்க்கரை இல்லாத பிஸ்கட்டுகளை மக்களுக்கு ஒரு பிராண்டின் பெயரில் வழங்க வேண்டும் என்பதே இவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் 2000 ஆம் ஆண்டில் பிஸ்க் ஃபார்ம் ஐ (Bisk Farm) துவங்கியுள்ளார். எனினும் இந்த நிறுவனத்தை பல கோடி மதிப்பிலான ஒரு சாம்ராஜ்யமாக மாற்ற வேண்டும் என்ற இவருடைய கனவு அடைவது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது.
2004 ஆம் ஆண்டில் பிஸ்க் ஃபார்ம் மூலமாக இவருக்கு 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதன் பிறகு இவரது கவனம் கிழக்கு இந்தியா மீது விழுந்தது. அங்கு அவர் வெற்றிகரமாக பல்வேறு உள்ளூர் ஃபிளேவர்களுடன் ஏழு புதிய ப்ராடக்டுகளை அறிமுகப்படுத்தினார். காலப்போக்கில் இவரது நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த பிஸ்கட்டுகள் மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ஒடிசா மக்களிடையே மிகவும் பிரபலமானது.
Also Read : தனிநபர் கடனை மூடுவதற்கு முன்பாக இவற்றை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
வருடங்கள் ஆக ஆக பிஸ்க் ஃபார்ம் சந்தையில் இருந்த பிற மிகப்பெரிய பிராண்டுகளுக்கு கடும் போட்டியாளராக திகழ்ந்தது. கிழக்கு இந்தியாவில் அதிக அளவில் பிரபலமாகிய இந்த நிறுவனம் 40% பங்குடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. 2008 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை 200 கோடி ரூபாயை அடைந்தது.
கொரோனா பரவலின் முதலாம் அலையின்போது 2020 ஆம் ஆண்டில் கிருஷ்ணா தாஸ் பால் தவறி போனார். இந்தியாவில் உள்ள பிஸ்கட் பிரிவில் சிறப்பான ஒரு இடத்தை கொண்டு இருந்த இவரது நிறுவனத்தை தற்போது கிருஷ்ணதாஸ் பாலின் மகனான அர்ப்பன் பால் எக்ஸிக்யூடிவ் சேர்மேனாக இருந்து இயக்கி வருகிறார். 2023 நிதியாண்டின் படி, SAJ Food நிறுவனத்தின் ஒரு வருட டேர்ன் ஓவர் 2,100 கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…