• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சீரற்ற காலநிலையின் விளைவான அனர்த்தங்கள் – Thinakaran

GenevaTimes by GenevaTimes
May 20, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சீரற்ற காலநிலையின் விளைவான அனர்த்தங்கள் – Thinakaran
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


44

 நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் சில பிரதேசங்களில் வெள்ளநிலையும் இன்னும் சில பிரதேசங்களில் மண்சரிவு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளன. மக்கள் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயற்பட்டால் இவற்றின் ஊடாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்த்தும் குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

அந்த வகையில் தற்போதைய சீரற்ற காலநிலையினால் புத்தளம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் பலவற்றில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் பிரதேச மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருக்கின்றது.

அதேநேரம் இச்சீரற்ற மழைக் காலநிலையினால் இம்மாவட்டத்தில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள புத்தளம் மாவட்டச் செயலாளர், பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 537 குடும்பங்களைச் சேர்ந்த 1775 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான 10 நலன்புரி நிலையங்களில் தங்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றுள்ளார்.

இச்சீரற்ற காலநிலையின் விளைவாக புத்தளம் மாவட்டப் பாடசாலைக்களுக்கு நேற்று விடுமுறை வழங்கப்பட்டதோடு இன்றும் நாளையும் கூட இப்பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கான உத்தரவை வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் வழங்கியுள்ளார்.

இதேவேளை இச்சீரற்ற காலநிலையின் விளைவாக நாட்டின் வேறு சில பிரதேசங்களிலும் வெள்ள நிலையும் ஏற்பட்டுள்ளது. அத்தோடு கடும் காற்றின் விளைவான பாதிப்புக்களும் மண்சரிவு அச்சுறுத்தலும் கூட தற்போதைய மழைக் காலநிலையினால் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நாட்டின் ஏழு மாவட்டங்கள் இப்பாதிப்புகளுக்கு முகம்கொடுத்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, அநுராதபுரம், கண்டி, காலி, களுத்துறை ஆகிய மாவட்டங்களே தற்போதைய சீரற்ற காலநிலையின் பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன.

இந்த சீரற்ற காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன் காரணத்தினால் மக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுவது இன்றியமையாததாகும்.

கடும் வரட்சி ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து ஆரம்பமாகியுள்ள மழைக் காலநிலையின் தொடக்கத்தியே சில பிரதேசங்களில் இவ் வெள்ள நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் முன்பு இவ்வாறு வெள்ள நிலை ஏற்படுவதில்லை. தற்போது சிறிதளவு மழை பெய்தாலும் வெள்ள நிலை ஏற்படுகிறது. இதற்கு பிரதேச மட்டத்தில் காணப்பட்ட சதுப்பு நிலங்களிலும் மழைநீர் வழிந்தோடவென இயற்கையாகவே அமைந்திருந்த வடிச்சல் நிலங்களிலும் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருப்பதும், பல இடங்கள் மண் கொண்டு நிரப்பப்பட்டிருப்பதும் சில இடங்கள் திண்மக்கழிவுகள் கொட்டப்படும் இடங்களாக மாறி இருப்பதும் காரணமாக விளங்குகின்றன. இவற்றின் விளைவாக மழைநீர் சீராக வழிந்தோட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் சிறுமழை பெய்தாலும் பல இடங்களில் வெள்ள நிலை ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அதேநேரம் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் தாக்கங்களும் குறுகிய காலப்பகுதியில் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறக்கூடிய நிலைமையும் ஏற்படுத்தி உள்ளது. அதுவும் வெள்ள நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் குறுகிய காலப்பகுதியில் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் போது அந்த மழைநீர் வழந்தோடவோ நிலத்தினால் உறிஞ்சப்படவோ வசதி இல்லாத நிலையும் காணப்படுகிறது. இவையே சிறுமழை பெய்தாலும் வெள்ள நிலைமை ஏற்படக் காரணமாக விளங்குகிறது.

அதேநரம் மலைநாட்டிலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் நிலத்தை தவறான முறையில் கையாளுவதை தவிர்க்க வேண்டிய தேவையும் உணரப்பட்டிருக்கிறது. ஏனென்றால் மரக்கறி செய்கை உள்ளிட்ட பல்வேறு தேவைகளின் நிமித்தம் நிலத்தை பயன்படுத்தும் போது பெரும்பாலும் தவறுகள் இடம்பெறுகின்றன. அவ்வாறான இடங்களில் மழைநீர் தேங்கியும் அந்த இடங்கள் மழைநீரை உறிஞ்சுவதாலும் மண்சரிவுக்கான வாய்ப்புக்கள் உருவாகின்றன.

இவை அனைத்தையும் பொதுவாக எடுத்து நோக்கும் போது மழைக் காலநிலையுடன் சேர்த்து வெள்ள நிலையும் மண்சரிவு அச்சுறுத்தலும் ஏற்ப மனிதனின் தவறான செயற்பாடுகளே முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றன என்பது தெளிவாகிறது.

ஆகவே மழை நீர் வழிந்தோடுவதற்கு இயற்கையாகவே அமைந்துள்ள சதுப்பு நிலங்களையும் வடிச்சல் நிலங்களையும் பேணிப் பாதுகாப்பதில் ஒவ்வொருவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு மலைநாட்டிலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் நிலத்தைக் கையாளுவதில் தவறுகள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளவும் தவறக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக சீரற்ற மழைக் காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைத்தும் தவிர்த்துக் கொள்ளலாம். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.



Read More

Previous Post

ஜோகூரில் தகுதியான ஆவணமின்றியிருந்த 18 வெளிநாட்டினர் கைது

Next Post

“புரி ஜெகந்நாதரே மோடியின் பக்தர்தான்” – சர்ச்சை கருத்துக்குப் பின்  வருத்தம் தெரிவித்த பாஜக சம்பித் பத்ரா  | Sambit Patra slip of tongue on Lord Jagannath, PM Modi sparks row

Next Post
“புரி ஜெகந்நாதரே மோடியின் பக்தர்தான்” – சர்ச்சை கருத்துக்குப் பின்  வருத்தம் தெரிவித்த பாஜக சம்பித் பத்ரா  | Sambit Patra slip of tongue on Lord Jagannath, PM Modi sparks row

“புரி ஜெகந்நாதரே மோடியின் பக்தர்தான்” - சர்ச்சை கருத்துக்குப் பின்  வருத்தம் தெரிவித்த பாஜக சம்பித் பத்ரா  | Sambit Patra slip of tongue on Lord Jagannath, PM Modi sparks row

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin