Last Updated:
சீன பொறியாளர்களை திரும்ப அழைத்ததால், தமிழ்நாட்டில் ஐபோன் தயாரிப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆப்பிள் இந்தியாவில் ஐபோன்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் பாக்ஸ்கான் ஆலைகளில் பணிபுரியும் சீன பொறியாளர்களை உடனடியாக தாயகம் திரும்பும்படி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதால் தமிழ்நாட்டில் ஐபோன் தயாரிக்கும் பணி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகளவில் ஐந்தில் ஒரு பங்கு ஆப்பிள் ஐபோன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு இறுதிக்குள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து ஐபோன்களும் இந்தியாவில் இருந்து தயாரித்து அனுப்ப ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆலைகளில் ஐபோன்கள் தயாரிக்கும் பணியை பாக்ஸ்கான் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதில், சீனா மற்றும் தைவான் நாடுகளின் பொறியாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், இந்தியாவில் பாக்ஸ்கான் ஆலைகளில் பணிபுரியும் சீன பொறியாளர்களை உடனடியாக தாயகம் திரும்புபடி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தங்கள் நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று சீனா உத்தரவிட்டதன் அடிப்படையில் பாக்ஸ்கான் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
July 03, 2025 10:46 AM IST