60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட நபர்கள், 55 முதல் 60 வயது வரையிலான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் 50 முதல் 60 வயதிலான ஓய்வு பெற்ற பாதுகாப்பு படை ஊழியர்கள் போன்றவர்களுக்கு அட்டகாசமான ரிட்டன்களை சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (SCSS) வழங்குகிறது. இந்த சேமிப்பு திட்டமானது ஒரு ஆண்டுக்கு 8.2% வட்டியை வழங்குகிறது. இந்த வட்டியானது 3 மாதங்களுக்கு ஒரு முறை அதாவது ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.
டெபாசிட் வரம்பு:
சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம் கணக்குகளை ஒருவர் தனியாகவோ அல்லது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் ஆகவும் திறக்கலாம். இந்த திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சமாக 1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். அதே நேரத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் மட்டுமே இந்த கணக்கில் ஒருவரால் டெபாசிட் செய்ய இயலும். அளவுக்கு அதிகமான டெபாசிட்கள் உடனடியாக திருப்பிக் கொடுக்கப்படுகிறது. கூடுதல் கால அளவுக்கு போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்டுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.
முக்கியமான அம்சங்கள்:
வட்டி விகிதம்: நாம் ஏற்கனவே கூறியது போல இந்த திட்டத்திற்கான வட்டியானது டெபாசிட் செய்த தேதியில் இருந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கப்படுகிறது (31 மார்ச், 30 ஜூன், 30 செப்டம்பர், 31டிசம்பர்).
வரி சலுகைகள்:
SCSS திட்டத்தில் நீங்கள் செய்யும் டெபாசிட்டுகள் வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C இன் கீழ் தகுதி பெறுகிறது.
முன்கூட்டியே அக்கவுண்ட்டை மூடுதல்: நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே அக்கவுண்டுகளை மூடும் பட்சத்தில் அக்கவுண்ட்டை திறந்த தேதி முதல் அக்கவுண்ட்டை மூடும் தேதி வரையிலான கால கால அளவு கணக்கிடப்பட்டு டிடக்ஷன்கள் விதிக்கப்படும்.
மெச்சூரிட்டி மற்றும் கால அளவு நீட்டிப்புகள்:
5 வருடங்கள் கழித்து இந்த அக்கவுண்டை நீங்கள் மூடலாம் அல்லது மேலும் 3 வருடங்களுக்கு அதே வட்டி விகிதத்திற்கு நீங்கள் அக்கவுண்டை நீட்டித்துக் கொள்ளலாம்.
சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டத்தில் ஒருவர் 5 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 5 வருடங்களில் அவருக்கு கிடைக்கும் ரிட்டன் என்னவாக இருக்கும்?
ஒருவேளை நீங்கள் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டத்தில் 5 லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால், 5 வருடங்கள் கழித்து நீங்கள் 7,05,000 ரூபாயை ரிட்டனாக எதிர்பார்க்கலாம்.
சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டத்தில் 10 லட்சம் ரூபாயை முதலீடு செய்பவருக்கு 5 வருடங்கள் கழித்து கிடைக்கும் ரிட்டன் என்ன?
சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டத்தில் ஒருவர் 10 லட்ச ரூபாயை முதலீடு செய்யும் பட்சத்தில், 5 வருடங்களுக்குப் பிறகு அவருக்கு 14,10,000 ரூபாய் ரிட்டனாக கிடைக்கும்.
Also Read |
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!
வரி சம்பந்தப்பட்ட நிபந்தனைகள்:
அனைத்து SCSS அக்கவுண்ட் மூலமாக நீங்கள் பெரும் வட்டி 50,000 ரூபாயை ஒரு வருடத்திற்கு கடந்து விட்டால் அதற்கு நீங்கள் 15G/15H படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு TDS தொகை கழிக்கப்படும்.
சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள நீங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு செல்லலாம் அல்லது ஆன்லைனில் சரி பார்க்கலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
