பென்ஷன், வட்டி மற்றும் ஒரு வீடு மூலமாக வருமானம் பெற்று ஒரு வருடத்தில் 50 லட்சம் ரூபாய் வருமானம் மிகாமல் பெறக்கூடிய சீனியர் சிட்டிசன்கள் ITR-1 படிவத்தை தேர்வு செய்ய வேண்டும். 50 லட்ச ரூபாயை விட அதிக வருமானம் பெறக்கூடிய அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு மூலமாக வருமானம் பெறும் சீனியர் சிட்டிசன்கள் ITR-2 படிவத்தை பயன்படுத்தலாம். ஒருவேளை, தொழில் அல்லது ஏதேனும் ப்ரொபஷன் மூலமாக வருமானம் பெறும் சீனியர் சிட்டிசன்களுக்கு ITR-3 படிவம் சரியானதாக இருக்கும். மாறாக, வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவுகள் 44AD அல்லது 44ADA-இன் கீழ் அனுமதிக்கப்பட்ட வரியை தேர்வு செய்பவர்கள் ITR-4 படிவத்தை பயன்படுத்தலாம்.
முதலீடுகளைப் பொறுத்தவரை, பாதுகாப்பு மற்றும் நிலையான ரிட்டன்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம் அதிக ரிட்டன்களை வழங்கக்கூடிய ஒரு சேமிப்புத் திட்டமாக அமைகிறது. இதில், டெபாசிட் லிமிட் 30 லட்சமாக மாற்றி அமைக்கப்பட்டு, ஓராண்டுக்கு 8% வட்டி வழங்கப்படுகிறது. பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் என்பது வரி இல்லாத ரிட்டன்களையும், அதே நேரத்தில் நீண்ட கால பாதுகாப்பையும் வழங்குகிறது. 5 வருடம் லாக்கின் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களில் வருமான வரிச் சட்டத்தில் உள்ள பிரிவு 80C-ல் டிடக்ஷன்களைக் கோரலாம்.
இதையும் படிக்க: அடுக்குமாடி குடியிருப்புவாசிகளே உஷார்..! இனி ஜி.எஸ்.டி கட்ட வேண்டும் – வெளியான முக்கிய தகவல்
ITR தாக்கல் செய்யும்போது சீனியர் சிட்டிசன்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
வருமான வரி தாக்கல் செய்யும்போது, பல சீனியர் சிட்டிசன்கள் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் மூலமாக வட்டி பெறுவதை குறிப்பிட மறந்து விடுகின்றனர். ஆனால், இதற்கு 10,000 ரூபாய் வரை வரி விலக்கு வழங்கப்படுகிறது. தவறான இன்கம் டேக்ஸ் ரிட்டன் படிவத்தை தேர்வு செய்துவிட்டால், குறைபாடுள்ள இன்கம் டேக்ஸ் ரிட்டனை தாக்கல் செய்வீர்கள். மேலும், இதனால் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளது.
அனைத்து பேங்க் அக்கவுன்ட்டுகள் மூலம் வரும் வருமானத்தையும் ITR தாக்கல் செய்யும் பொழுது குறிப்பிட வேண்டும். பேங்க் அக்கவுன்ட் மூலமாக வரும் வருமானம் மட்டுமல்லாமல், நீங்கள் கிளைம் செய்த ரீஃபண்ட் தொகை பற்றியும் குறிப்பிட வேண்டும். பேங்க் ஸ்டேட்மெண்டில் உள்ள அனைத்து கிரெடிட் என்ட்ரிகளையும் ஒருவர் சரிபார்ப்பது அவசியம்.
இதையும் படிக்க: கடனுக்கான EMI கட்டத் தவறினால் என்னாகும் தெரியுமா? சட்டம் சொல்வது என்ன?
உங்களுடைய ரிட்டனில் நீங்கள் கிளைம் செய்துள்ள TDS தொகையும் படிவம் 26AS-இல் பிரதிபலித்துள்ள தொகையும் ஒத்துப் போகாவிட்டால், வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸை பெறுவீர்கள். வங்கி மூலம் பிரிவு 194P-ன் கீழ் வரி வசூலிக்கப்பட்டுள்ள பட்சத்தில், இந்தியாவில் வசிக்கும் 75 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட சீனியர் சிட்டிசன்கள் ITR தாக்கல் செய்ய தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
April 13, 2025 6:47 PM IST

