Last Updated:
சீனியர் சிட்டிசன்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் என்பது பணி ஓய்வோடு நின்று போகக்கூடிய ஒரு விஷயம் கிடையாது. அது அவர்களுடைய மருத்துவ செலவுகள், வீட்டை பராமரிப்பது அல்லது உறவினர்களுக்கு உதவுவது போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
சீனியர் சிட்டிசன்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் என்பது பணி ஓய்வோடு நின்று போகக்கூடிய ஒரு விஷயம் கிடையாது. அது அவர்களுடைய மருத்துவ செலவுகள், வீட்டை பராமரிப்பது அல்லது உறவினர்களுக்கு உதவுவது போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த செலவுகளை சமாளிப்பதற்கு கடன்கள் உதவுகின்றன. இவர்களுடைய வருமானம் மிகக் குறைவாக இருப்பதன் காரணமாக கடன் வாங்குவது என்பது சற்று சிரமமான ஒரு காரியமாக இருந்தாலும், சீனியர் சிட்டிசன்களுக்காகவே பிரத்தியேகமாக ஒரு சில கடன் வழங்கும் ஆப்ஷன்கள் உள்ளன.
60 வயதிற்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்கள் சொந்தமாக வீடு வைத்திருக்கும் பட்சத்தில், அதனை அடமானமாக காட்டி கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை திருப்பி செலுத்துவது என்பது கடன் பெறுபவரின் ஆயுட்காலத்தை பொறுத்து அமையாமல் எதிர்காலத்தில் அந்த சொத்தை விற்பனை செய்வதன் மூலமாக பெறப்படுகிறது. இந்த செயல்முறை வரி இல்லாமல் மற்றும் பென்ஷன் ஃபண்டுகளுக்கு தோதாக செயல்படுத்தப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் SBI போன்ற வங்கிகள் பென்ஷனர்களுக்காகவே பர்சனல் லோன்களை வழங்குகின்றன. இந்த லோன் தொகையானது அவர்கள் பெறும் பென்ஷன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. மேலும் கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 3 முதல் 5 வருடங்களாக நிர்ணயிக்கப்படுகிறது. பிற கடன்களோடு ஒப்பிடும்போது இதற்கான வட்டி விகிதம் குறைவானதாகவும் உள்ளது.
தங்க நகைகளை வைத்திருக்கும் சீனியர் சிட்டிசன்கள் அதனை அடமானமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மிகக் குறைவாக இருக்கும். மேலும் ஒரு சில மணி நேரங்களிலேயே கடன் தொகையை உங்களுடைய அக்கவுண்டில் பெறலாம் மற்றும் பர்சனல் லோன்களோடு ஒப்பிடும்போது இதற்கான வட்டி விகிதமும் குறைவாக இருக்கும்.
ஓய்வு பெற்றவர்கள் மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது LIC பாலிசி போன்றவற்றை அடமானமாக காட்டி லோன்களை மிக எளிமையாக பெறலாம். இதற்கான வட்டி விகிதமும் குறைவு. நீங்கள் அடமானமாக காட்டும் சொத்து மதிப்பின் அடிப்படையில் உங்களுக்கான கடன் தொகையானது நிர்ணயிக்கப்படும். குறுகிய கால தேவைகளுக்கு இந்த கடன்கள் சிறந்ததாக அமைகின்றன.
சீனியர் சிட்டிசன்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது வருமானம் ஈட்டும் தங்களுடைய பிள்ளைகளுடன் துணை விண்ணப்பதாரராக சேர்ந்து கொள்ளலாம். இது வழக்கமாக வீட்டை மராமத்து பார்ப்பது அல்லது மருத்துவ செலவு போன்ற பெரிய அளவிலான கடன்களுக்கு உதவியாக இருக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
நிச்சயமாக, கடனை அங்கீகரிப்பது என்பது வருமானத்தின் நிலைத்தன்மை, வயது மற்றும் துணை விண்ணப்பதாரர்களின் அடிப்படையில் அமைகிறது. மேலும் துணை விண்ணப்பதாரரை இளமையானவராக தேர்ந்தெடுக்கும் போது கடனை திருப்பி செலுத்துவதற்கான பாதுகாப்பு வங்கிக்கு கிடைக்கிறது.
ஆம், பென்ஷனோடு தொடர்புடைய லோன்கள், நகை கடன் மற்றும் அடமானங்கள் மூலமாக பெறப்படும் கடன்கள் ஆகியவை சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படுகின்றன.
July 23, 2025 4:33 PM IST
சீனியர் சிட்டிசன்கள் பணி ஓய்வுக்கு பிறகு கடன் பெறுவது சாத்தியமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!


