Last Updated:
ரோகித் சர்மா, விராட் கோலிக்கு மாற்று வீரர்களாக கருதப்படும் ஜெய்ஷ்வால், சுப்மான் கில் ஆகியோரும் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம்பெறும் வகையில் இந்திய அணி வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பதால் ஐபிஎல் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் டெஸ்ட் போட்டியிலேயே 20 ஓவர் போட்டியை போன்று அதிரடியாக விளையாடுவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், 20 ஓவர் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதில் தேர்வுக் குழுவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்களின் செயல்பாடுகளை பொருத்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு வீரர்களை தேர்வு செய்ய தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பந்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ரிஷப் பந்த் இடம்பெற வேண்டும் என்றால் நடப்பு ஐபிஎல் போட்டியில் அவர் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.
இதேபோன்று ரோகித் சர்மா, விராட் கோலிக்கு மாற்று வீரர்களாக கருதப்படும் ஜெய்ஷ்வால், சுப்மான் கில் ஆகியோரும் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பும்ரா காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவருக்கு மாற்று வீரராக இடம்பெற மயங்க் யாதவும் திறமையை வெளிப்படுத்திய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி பின்னடைவை சந்தித்த நிலையில், 20 ஓவர் உலகக் கோப்பைக்காக பலம் வாய்ந்த இளம் அணியை கட்டமைக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் அதிக கவனம் செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது.
March 22, 2025 4:41 PM IST