ரஷ்யாவிடமிருந்து (சோவியத் யூனியன்) பிரிந்து சென்ற உக்ரைன் போல சீனாவிடமிருந்து பிரிந்து சென்றது தைவான். ஆனால், இன்றளவும் உக்ரைனை ரஷ்யா சொந்தம் கொண்டாடுவதுபோல தைவனை சீனா சொந்தம்கொண்டாடுகிறது. இந்த விவகாரம் நீண்ட காலமாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. 1979-ம் ஆண்டில் அமெரிக்கா தைவானின் தலைநகர் தைபேயிலிருந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு இராஜதந்திர அங்கீகாரத்தை மாற்றிக்கொண்டது. தைவானின் முறையான சுதந்திர அறிவிப்பையும் ஆதரிக்கவில்லை என்பதே அமெரிக்காவின் நீண்டகால கருத்து. அதே நேரம், தைவான் தன்னைத் தற்காத்துக்கொள்ள எல்லா உரிமையும் உண்டு எனக் கூறும் அமெரிக்கா, தற்காப்பு சட்டத்தின் கீழ் தைவானுக்கு ஆதரவாளராகவும், ஆயுத சப்ளையராகவும் உறவைத் தொடர்கிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், “சீனா தைவானைத் தாக்கினால் அமெரிக்கப் படைகள் தைவானைப் பாதுகாக்கும்” என்றார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் அப்போது தைவான் சென்று வந்தார். இதெல்லாம் அப்போது பெரும் பேசுபொருளாகவும், சீனாவின் கண்டனத்துக்கும் உள்ளானது. இந்த நிலையில், உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் உறுதியாக கருத்து தெரிவிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் சீனா – தைவான் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

